சேய் தனிமம்

சேய் தனிமம் (Daughter element) என்பது கதிரியக்கம் காரணமாகப் புதிதாகத் தோன்றும் தனிமத்தினைக் குறிக்கும். இத்தனிமம் தோன்றக் காரணமான தனிமம் தாய்தனிமம் எனப்படும். எடுத்துக்காட்டிற்காக

  • 88ரேடியம் 226 ஆல்ஃபா துகளை உமிழ்ந்து 86 ரேடான் 222 ஆக மாறுகிறது.

இங்கு ரேடியம் தாய் தனிமமாகும்; ரேடான் சேய் தனிமமாகும்.

  • 27 கோபால்ட் 60 ஒரு பீட்டா துகளை உமிழ்ந்து 28 நிக்கல்60 ஆக மாறும்.

இங்கு கோபால்ட் தாய் தனிமம் ஆகும்; நிக்கல் சேய் தனிமமாகும்.

மேற்கோள்

தொகு
  • அணுவைப்பற்றி, பம்பாய் தமிழ்ச் சங்கம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேய்_தனிமம்&oldid=2745900" இலிருந்து மீள்விக்கப்பட்டது