சேரமான் மாரிவெண்கோ

(சேரமான் மாரி வெண்கோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சேரமான் மாரிவெண்கோ சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன். சங்க காலத் தமிழக வரலாற்றிலேயே இவன் காலத்தில்தான் சேர சோழ பாண்டிய மன்னர்கள் மூவரும் நண்பர்களாக ஒன்று கூடியிருந்ததைக் காணமுடிகிறது. பாரி வள்ளலை மூவேந்தரும் சேர்ந்து முற்றுகையிட்டனர் என்பது மற்றொரு நிகழ்ச்சி. ஒருவேளை பாரியின் பறம்புமலையை முற்றுகையிட்டவர்கள் இவர்களாகவும் இருத்தல் கூடும்.

சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வணங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

புலவர் ஔவையார் சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய மூவரும் ஒருங்கு ஓரிடத்தில் கூடியிருக்கக் கண்டு வாழ்த்துகிறார்.

ஞாயிறு, திங்கள், தீ இவற்றின் ஒளிகளை (பகல் வெளிச்சம், நிலா வெளிச்சம், விளக்கு வெளிச்சம்) ஒருசேரக் காண முடியாது. சோழன் சூரியகுலம், பாண்டியன் சந்திர-குலம், சேரன் அக்கினிக்குலம் அதுபோல் இருந்த தமிழ்நாட்டு அரசர்களின் நிலைமை மாறி இவர்கள் பார்ப்பார் வளர்க்கும் முத்தீ போல ஓரிடத்தில் இருந்தார்களாம்.

புலவர் இவர்களைக்குச் சில அறிவுரைகள் கூறுகிறார்.

  • பார்ப்பார்க்குப் பூவும் பொன்னும் புனலுடன் சொரியவேண்டும்.
  • மகளிர் ஊட்டும் தேறல் உண்டு மகிழ்ந்திக்க வேண்டும்.
  • இரவலர்க்கு அணிகலன்களை வழங்க வேண்டும்.
  • வாழச் செய்வது அவர் செய்யும் நல்வினையே. இறக்கும்போது அது ஒன்றுதான் அவருடன் வரும்.
  • வானத்து மீனினும், வழங்கும் மழைத்துளியினும் பல்லாண்டு காலம் வாழவேண்டும். [1]

அடிக்குறிப்பு தொகு

  1. புறநானூறு 367
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரமான்_மாரிவெண்கோ&oldid=2564879" இலிருந்து மீள்விக்கப்பட்டது