சேரலாதன்
சேரலாதன் என்னும் பெயர் கொண்ட அரசர்கள்:
- இமையவரம்பன் நெடுஞ் சேரல் ஆதன் - இவன் இரண்டாம் பதிற்றுப்பத்து பாடல் தலைவன். இவனைப் பாடியவர் குமட்டூர்க் கண்ணனார்
- ஆடுகோட்பாட்டுச் சேரல் ஆதன் - ஆறாம் பதிற்றுப்பத்து பாடல் தலைவன். இவனைப் பாடிய புலவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார்
- பெருஞ் சேரல் ஆதன் - சோழன் கரிகாற் பெருவளத்தானோடு போரிட்டுப் புறப்புண் நாணி வடக்கிருந்தான் (புறம் 65)
குழப்பம் தீர்க சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப்புறம் என்னும் இடத்தில் போரிட்டான். சோழனிடம் அகப்பட்டுக்கொண்டான். குடவாயில் கோட்டத்துச் சிறையில் வைக்கப்பட்டான். தாகம் தீர்க்கத் தண்ணீர் கேட்டான். சிறைக்காவலன் காலம் தாழ்ந்து தண்ணீர் கொண்டுவந்தான். கணைக்கால் இரும்பொறை தன் இழிநிலையை எண்ணி நீரைப் பருகாமல் ஒரு பாடலைப பாடி வைத்துவிட்டு இறந்துபோனான். அவன் பாடிய பாடல் புறநானூறு 74.