சேரி (இதழ்)
சேரி 1990 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது. இது தொல்தமிழர் பல்வேறு கூறுகளால் ஒடுக்கப் படுவதைக் கண்டு விழித்தெழுந்து, விழிப்புணர்வு ஊட்ட, செய்திகள், கட்டுரைகள், சான்றுகளின் வழியாகச் சுட்டிக் காட்டும் படைப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.