சேலம் ரேவதி மீதான அமில தாக்குதல் கொலை வழக்கு

சேலம் ரேவதி மீதான அமில தாக்குதல் கொலை வழக்கு என்பது 2021 இல் நிகழ்ந்ததாகும். [1]

நிகழ்வு தொகு

தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் 2021 ஆகஸ்டு மாதம் 30ம் தேதி மாலை ரேவதி என்ற 47 வயதுப் பெண் தனது தாயாருடன் நின்றிருந்தார். அப்போது ரேவதியின் கணவர் யேசுதாஸ் அமிலத்தை ரேவதியின் மீது வீசிவிட்டு தப்பி ஓடினார். அமிலத் தாக்குதலால் ரேவதி பலத்த காயமடைந்தார்.

அவருடைய முதுகுபகுதி சேதம் அடைந்ததாகவும், 70சதவீத உடல் அமில தாக்குதலால் தீபுண்ணாகியதாகவும் கூறப்பட்டது. உடனடியாக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.[2]

கைது தொகு

ரேவதியின் கணவரான 52 வயதான யேசுதாசை கரூரில் மறைவிடத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது ஐபிசி 498 (பி), 307, 326 (பி), 302 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கரூரில் உள்ள மறைவிடத்தில் இருந்து அவரை கைது செய்தனர்.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. Tamil Nadu: Woman dies after acid attack by husband in Sale -By: Express Web Des -the indian express -August 31, 2021
  2. செய்திதமிழகம்சேலத்தில் ஆசிட் வீசப்பட்ட பெண் ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: தலைமறைவாக இருந்த கணவன் கைது - dinakaran Aug 31, 2021 |