சைபீரியன் வலை (சதுரங்கம்)

சைபீரியன் வலை (The Siberian Trap) என்பது சதுரங்க ஆட்டத்தின் தொடக்க நிலையிலேயே தந்திரமாக விரிக்கப்படும் ஒரு வலையாகும். சுமித்மோர்ரா சிசிலியன் தடுப்பாட்டத்தில் வழக்கமான சில் தொடர் நகர்வுகளுக்குப் பின்னர் வெள்ளை நிறக்காய்களுடன் விளையாடும் ஆட்டக்காரர் இவ்வலையில் சிக்கி தன்னுடைய ராணியை இழப்பார். தென்மேற்கு சைபீரியாவின் நோவோசிபிர்சுக் நகரத்தைச் சேர்ந்தவரான போரிசு சுகிப்கோவ் இத்தந்திர வலைவிரிப்பைக் கண்டுபிடித்த காரணத்தால் அவருடைய நாட்டின் பெயரே இவ்வலை தந்திரத்திற்கு வைக்கப்பட்டது.

சைபீரியன் வலை
abcdefgh
8
a8 black rook
c8 black bishop
e8 black king
f8 black bishop
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black queen
d7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
c6 black knight
e6 black pawn
c4 white bishop
e4 white pawn
g4 black knight
c3 white knight
f3 white knight
h3 white pawn
a2 white pawn
b2 white pawn
e2 white queen
f2 white pawn
g2 white pawn
a1 white rook
c1 white bishop
f1 white rook
g1 white king
8
77
66
55
44
33
22
11
abcdefgh
9...Nd4!நகர்த்தலால் கருப்பு வெற்றி
நகர்வுகள் 1.e4 c5 2.d4 cxd4 3.c3 dxc3 4.Nxc3 Nc6 5.Nf3 e6 6.Bc4 Qc7 7.0-0 Nf6 8.Qe2 Ng4 9.h3??
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் B21
பெயரிடப்பட்டது போரிசு சுகிப்போவ் நோவாசிபிர்க்கு சைபீரியா
மூலம் சிசிலியன் தடுப்பாட்டம், சுமித் - மோர்ரா பலி

1987 ஆம் ஆண்டில் கோலன்பெட் மற்றும் சுகிப்கோவ் இடையிலான போட்டி ஆட்டத்திலும், 1990 ஆம் ஆண்டில் புடாபெசுட் நகரில் நடைபெற்ற டெசின்கை மற்றும் மேகராமோவ் இடையிலான போட்டி ஆட்டத்திலும் என இருமுறை இவ்வலை விரிக்கப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.


பகுப்பாய்வு

தொகு

1. e4 c5

சிசிலியன் தடுப்பாட்டம் - திறப்பு நகர்வு

2. d4 cxd4 3. c3 dxc3

வெள்ளை நிற ஆட்டக்காரர் 3.c3 சுமித் மோர்ரா பலிகொடுத்தல் ஆட்டத்தை அறிமுகம் செய்து ஆடுகிறார். கருப்புநிற காய்களுடன் விளையாடும் ஆட்டக்காரார் அப்பலியை ஏற்றுக்கொண்டு வெள்ளைநிறச் சிப்பாயைக் கைப்பற்றுகிறார்.

4. Nxc3 Nc6 5. Nf3 e6 6. Bc4 Qc7 7. 0-0 Nf6 8. Qe2

வெள்ளைநிறக் காய்களுடன் ஆடுபவர் e4–e5 நகர்த்தலுக்கு ஆயத்தமாகிறார். அடுத்த நகர்வை வெள்ளைநிறத்து ஆட்டக்காரர் எச்சரிக்கையாகக் கவனித்து ஆடும்பட்சத்தில் இந்நகர்வு ஆடக்கூடிய நகர்வே ஆகும். 8. Re1 Bc5 என்ற எட்டாவது நகர்வுக்குப் பின்னர் வெள்ளைநிற காய்களுடன் ஆடுபவரின் f2- சதுரத்தில் பதட்டமான சூழல் நிலவுவதால் கருப்புநிற காய்களுடன் ஆடும் ஆட்டக்காரருக்கு நல்ல ஆட்டம் கிடைக்கிறது. மேற்கண்ட எட்டாவது நகர்வுக்குப் பதிலாக வெள்ளை 8.h3... என்ற நகர்வை ஆடினாலும்
8. h3 a6 என்ற பதில்நகர்வு நகர்த்தப்பட்டு வெள்ளைக்கு பெரிய அனுகூலம் ஏதும் ஏற்படவில்லை. சதுரங்க கோட்பாடுகளின் வழிகாட்டுதல் படியான 8.Nb5 Qb8 9.e5 Nxe5 10.Nxe5 Qxe5 11.Re1 நகர்வுகளால் வெள்ளைநிற காய்களுடன் ஆடுபவருக்கு தியாகம் செய்யப்பட்ட சிப்பாய்களுக்கு ஈடாக சிறிதளவு பிரதிபலன் கிடைக்கிறது.

8... Ng4! 9. h3?? (படம் பார்க்கவும்)

வெள்ளை ஆட்டக்காரரின் 9. h3 என்ற நகர்வு சந்தேகத்திற்கு இடமின்றி தவறான நகர்வு ஆகும். இதே போன்றதொரு கதிதான் 1988 ஆம் ஆண்டில் நோவோசிபிர்சுக் நகரில் நடைபெற்ற கிராமாட்சியன் மற்றும் சுகிப்கோவ் இடையிலான ஆட்டத்திலும் ஏற்பட்டது. மாற்று முயற்சியான 9.Rd1... என்ற நகர்விலும் 9.Rd1 Bc5 என்ற பதில் நகர்வினால் சிக்கிய வலையிலிருந்து மீளமுடிவதில்லை. கோட்பாட்டு நகர்வுகள் 9.Nb5! ... என்ற நகர்வை வெள்ளைக்குப் பரிந்துரைக்கின்றன. பதிலுக்கு கருப்பு 9... Qb8 (10...a6 11.Nc3 Nd4! என்ற பயமுறுத்தலுக்காக) 10.h3 h5 11.g3 Nge5 12.Nxe5 Nxe5 13.Bf4 a6 என்று நகர்வுகள் ஆடப்பட்டு இரு வீரர்களுக்கும் ஆட்டமானது சமவாய்ப்புகளை உண்டாக்குகிறது.

9... Nd4!

கருப்புநிற காய்களின் ஆட்டக்காரரின் மிரட்டும் நகர்த்தல் 10...Nxf3+ அதனைத் தொடர்ந்து நகர்த்தப்படும் 11...Qh2# என்ற நகர்வு கருப்புநிற காய்களுடன் விளையாடுபவருக்கு வெற்றியை அளிக்கிறது. ஒருவேளை வெள்ளை 10.Nxd4?? என்று நகர்வைச் செய்தாலும் 10...Qh2# என்ற கருப்பின் நகர்வினால் வெள்ளையின் தோல்வி தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  • Burgess, Graham (1994). Winning with the Smith–Morra Gambit. Batsford. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8050-3574-5.
  • Nick de Firmian (1999). Modern Chess Openings: MCO-14. Random House Puzzles & Games. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8129-3084-3.
  • John Nunn (ed.); et al. (1999). Nunn's Chess Openings. Everyman Chess. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85744-221-0. {{cite book}}: |author= has generic name (help); Explicit use of et al. in: |author= (help)
  • Langrock, Hannes (2006). The Modern Morra Gambit: A Dynamic Weapon Against the Sicilian. Russell Enterprises. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-888690-32-1.

வெளிப்புற இணைப்புகள்

தொகு