சைப்ரஸ் கழுதை

சைப்ரஸ் கழுதை (Cyprus donkey) என்பது மத்திய தரைக்கடல் தீவான சைப்ரசினைச் சார்ந்த கழுதை இனமாகும்.[1] இரண்டு முக்கிய விகாரங்கள் உள்ளன: வெளிறிய வயிற்றுடன் அடர் நிற வண்ணத்துடன் ஐரோப்பிய வம்சாவளியைச் சார்ந்த ஒன்று; மற்றொன்று சிறிய சாம்பல் நிற ஆப்பிரிக்க வகை. இந்த வகை மொத்த மக்கள்தொகையில் சுமார் 20% ஐ கொண்டுள்ளது. இது 2002இல் சுமார் 2200 முதல் 2700 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது.

துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சைப்ரசின் வடக்குப் பகுதியில் உள்ள கார்பாசு தீபகற்பத்தில் சில நூற்றுக்கணக்கான சைப்ரஸ் கழுதைகள் வாழ்கின்றன. 1974இல் துருக்கிய படையெடுப்பின் போது கிரேக்க சைப்ரியாட் விவசாயிகளால் இவை இங்கு விடப்பட்டன. 2008ஆம் ஆண்டில், கிரேக்க மற்றும் துருக்கிய சைப்ரியாட்சு குழு ஒன்று இந்த விலங்குகளை அழிவிலிருந்து காப்பாற்ற ஏற்பாடு செய்தது. இருப்பினும் இவற்றில் பத்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Breed data sheet: Cyprus/Cyprus. Domestic Animal Diversity Information System of the Food and Agriculture Organization of the United Nations. Accessed December 2013.
  2. "Donkey Campaign Unites Cypriots". London: பிபிசி. 22 April 2008. http://news.bbc.co.uk/2/hi/europe/7361353.stm.  Accessed November 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைப்ரஸ்_கழுதை&oldid=3774945" இலிருந்து மீள்விக்கப்பட்டது