சைப்ரின் (Cyprine) என்பது Ca19Cu2+(Al10Mg2)Si18O68(OH)10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். சிலிக்கேட்டு கனிமமான வெசுவியானைட்டு [2] குழுவில் தாமிரம் மிகுதியான கனிமமாக சைப்ரின் வகைப்படுத்தப்படுகிறது. இதேபோல மற்றொரு தாமிரம் மிகுதி கனிமத்திற்கும் இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் தாமிரத்தின் ஆதிக்கம் அக்குழுவிற்குள் குறைவாக காணப்படும். தென் ஆப்பிரிக்காவிலுள்ள கலகரி மாங்கனீசு சுரங்கம், ஒட்டாசெல் நகரத்திலுள்ள வெசெல்சு சுரங்கத்திற்கு அருகாமை போன்ற இடங்களில் சைப்ரின் முதன்முதலில் கண்டறியப்பட்டது [1]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் Cyp என்ற குறியீட்டால் சைப்ரினை குறிப்பிடுகிறது.[3]

சைப்ரின்
Cyprine
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு வகை கனிமம்
வேதி வாய்பாடுCa19Cu2+(Al10Mg2)Si18O68(OH)10
இனங்காணல்
படிக அமைப்புநாற்கோணம்
மேற்கோள்கள்[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Panikorovskii, T.L.; Shilovskikh, V.V.; Avdontseva, E.Y.; Zolotarev, A.A.; Pekov, I.V.; Britvin, S.N.; Krivovichev, S.V. (October 2015). "Cyprine, IMA 2015-044". Mineralogical Magazine. CNMNC Newsletter No. 27 79: 1228. doi:10.1180/minmag.2015.079.5.16. http://nrmima.nrm.se//CNMNC_Newsletter_27-2015.pdf. பார்த்த நாள்: 2020-04-01. 
  2. "Cyprine: Cyprine mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2017-11-19.
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைப்ரின்&oldid=4136548" இலிருந்து மீள்விக்கப்பட்டது