சைமன் எஃப். கிரீன்
பிரித்தானிய வானியலாளர்
சைமன் எஃப். கிரீன் (Simon F. Green) (பிறப்பு: 1959) ஒரு பிரித்தானிய வானியலாளரும் கோள் அறிவியலாளரும் ஆவார். இவர் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் கோள், விண்வெளி அறிவியலில் முதுநிலை விரிவுரையாளராக இருக்கிறார். இவரது சிறப்பு புலமைத் துறை சிறுகோள்களையும் நெப்டியூன் கடப்புப் பொருள்களையும் உள்ளடக்கியதாகும். இவர் வேகமாக இயங்கும் பொருள்களைக் கண்டறிய, இராசு(IRAS) செயற்கைக் கோளிl பலகாலம் பணிபுரிந்துள்ளார். இவர் 1983 இல், ஜான் கே, தேவீசுடன் இணைந்து அபொல்லோ சிறுகோளான 3200 பேத்தான் சிறுகோளைக் கண்டுபிடித்தார்.
9831 சைமன்கிரீன் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. [1]