சையத் அப்துல்லா பரேல்வி

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்

சையத் அப்துல்லா பரேல்வி (Syed Abdullah Barelvi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சையத் அப்துல்லா பிரெல்வி என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். இந்திய சுதந்திரப் போராட்ட அரசியல்வாதி, பத்திரிகையாளர் மற்றும் தி பாம்பே குரோனிக்கல் பத்திரிகையின் ஆசிரியர் என பன்முகத்தன்மையுடன் செயல்பட்டார்.[1] இந்தியாவில் முசுலீம்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்காக 1929 ஆம் ஆண்டு சூலை மாதம் 8 ஆம் தேதியன்று காங்கிரசு முசுலிம் கட்சியை நிறுவினார்.[2] பரேல்வி இயக்கத்தின் நிறுவனரான இமாம் அகமது ரசா கான் பரேல்வியின் மாணவர் என்றும் இவர் அறியப்படுகிறார். [3] 1924 ஆம் ஆண்டு தி பாம்பே குரோனிக்கிளில் பிரித்தானிய அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பத் தொடங்கினார். [4] [5] [6]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

சையத் அப்துல்லா பரேல்வி 1891 செப்டம்பர் 18 அன்று பம்பாயில் (இப்போது மும்பை, மகாராட்டிரம்) சையத் அப்துல்லாவாகப் பிறந்தார். இவரது பெற்றோர் உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

சையத் அப்துல்லா பரேல்வி அஞ்சுமன்-இ-இசுலாம் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேசன் வரை படித்தார் மற்றும் எல்பின்சுடோன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். [7]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சையத் அப்துல்லா பரேல்வி கைருன் நிசா ரசுவியை மணந்து கொண்டார். இத்தம்பதியருக்கு 4 குழந்தைகள் இருந்தனர். [8]

மேற்கோள்கள்

தொகு
  1. "S.A. Brelvi, Journalist and Secular Nationalist Who Stood Up to the British Raj". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.
  2. Guha, Ramachandra. "The Good Indian, The Hindu". Welcome to Ramachandra Guha.in (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.
  3. "S.A. Brelvi's nationalist journalism". Indian Culture (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.
  4. "बरेली ने भुलाया सेनानी सैयद अब्दुल्ला बरेलवी को". Hindustan (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.
  5. "Print History: Newspaper Historians of Bombay". PrintWeek India. பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.
  6. "How Gandhi gave India a sense of dignity and national purpose". Quartz (in ஆங்கிலம்). 2018-10-02. பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.
  7. Remembering Our Leaders (in ஆங்கிலம்). Children's Book Trust. 1989. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7011-955-5.
  8. DIVISION, PUBLICATIONS. Some Eminent in Indian Editors (in ஆங்கிலம்). Publications Division Ministry of Information & Broadcasting. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-2598-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_அப்துல்லா_பரேல்வி&oldid=3791364" இலிருந்து மீள்விக்கப்பட்டது