சைரஸ் மிஸ்ட்ரி

சைரஸ் பாலோன்ஜி மிஸ்ட்ரி (Cyrus Pallonji Mistry, 4 சூலை 1968 – 4 செப்டம்பர் 2022) அயர்லாந்தின் வணிகர் பாலோன்ஜி மிஸ்ட்ரியின் கடைசி மகனாவார். டாட்டா குழுமம் நிறுவனத்தின் துணைத்தலைவராகவும் தலைவராகக் கூடியவராகவும் நவம்பர் 23, 2011 அன்று நியமிக்கப்பட்டார்.[2] இந்த நிறுவனத்தை இந்தியரல்லாதோர் ஒருவர் இவ்வாறு தலைமையேற்க விருப்பது முதல் முறையாகும்.[1]. மிஸ்ட்ரி ரத்தன் டாட்டாவின் கீழ் துணைத்தலைவராக ஓராண்டுக் காலம் பணிபுரிந்தபின் திசம்பர் 2012 முதல் தலைவராகப் பொறுப்பேற்றார்.[3] இம்பீரியல் கல்லூரி, லண்டனிலிருந்து குடிசார் பொறியியலில் பட்டம்பெற்ற பின்னர் லண்டன் வணிகப் பள்ளியில் வணிக மேலாண்மையில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். டாட்டா சன்ஸ் நிறுவனத்தைத் தவிர சபூர்ஜி பாலோன்ஜி அண்ட் கோ, போர்ப்ஸ் கோகக், அஃப்கான்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், யுனைடெட் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களின் மேலாண்மைக் குழுக்களில் இயக்குனராக இருந்தார்.

சைரஸ் பாலோன்ஜி மிஸ்ட்ரி
பிறப்பு(1968-07-04)4 சூலை 1968
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இறப்புசெப்டம்பர் 4, 2022(2022-09-04) (அகவை 54)
பால்கர், மகாராட்டிரா, இந்தியா
தேசியம்அயர்லாந்து[1]
இனம்பார்சி
கல்விBE, MS
படித்த கல்வி நிறுவனங்கள்இம்பீரியல் கல்லூரி லண்டன், லண்டன் வணிகப் பள்ளி
பணிடாட்டா குழுமம் நிறுவன துணைத் தலைவர்
பெற்றோர்பாலோன்ஜி மிஸ்ட்ரி
வாழ்க்கைத்
துணை
ரோஹிகா மிஸ்ட்ரி

மிஸ்ட்ரி 2022 செப்டம்பர் 4 இல் சாலை விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்தார்.[4]

பதவி நீக்கம்

தொகு

2012 இறுதியில் டாட்டா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடாவிற்கு அடுத்துப் பதவி ஏற்றார். 2016 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 24 அன்று அப்பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்தியக் குழுமங்களின் இடையில் இந்நிகழ்வு பெரும் அதிர்வை உண்டாக்கியது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Cyrus Mistry: Avid golfer & foodie, avoids cocktail circuit". Economic Times. 2011-11-24. பார்க்கப்பட்ட நாள் 2011-11-24.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-24. பார்க்கப்பட்ட நாள் 2011-11-24.
  3. Cyrus Mistry takes over the position of chairman for Tata Sons in December 2012
  4. "Cyrus Mistry, ex Tata Sons Chairman, dies in car accident near Mumbai: news agency PTI". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-04.
  5. http://www.thehindu.com/business/markets/tata-group-stocks-fall-after-sudden-removal-of-cyrus-mistry/article9265055.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைரஸ்_மிஸ்ட்ரி&oldid=3857302" இலிருந்து மீள்விக்கப்பட்டது