சைவ சமய நெறி (நூல்)
(சைவ சமய நெறி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மறைஞான சம்பந்தர் 16 ஆம் நூற்றாண்டில் எழுதிய நூல்களில் ஒன்று சைவ சமய நெறி. [1] 727 குறட்பா கொண்டது. மூன்று பகுதியாக உள்ளது.
முதலாவது பாயிரப் பகுதி. இதில் பெரியோர், உணவளிப்பார், நன்கொடையாளர் முதலானோரை வணக்குவது புதுமை.
இரண்டாவது ஆசாரியரது இலக்கணம் கூறும் பகுதி. இதில் நதிக்கரையில் பிறத்தல், நல்ல குலத்தில் பிறத்தல், மனக்குற்றம் இல்லாமை, தவக்கொடை [2] பெற்றிருத்தல் முதலானவை கூறப்பட்டுள்ளன. இவர் பெண்களுக்கும் தவக்கொடை உண்டு என்கிறார்.
மூன்றாவது மாணாக்கரது இலக்கணம் கூறும் பகுதி. ஆசாரியருக்குத் தொண்டு செய்தல், குளிருந்த நீரில் நீராடுதல், சிவ-சின்னங்கள் தரித்தல், பூசை செய்தல், வணங்கும் முறை முதலானவை இதில் கூறப்பட்டுள்ளன.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005