சொக்கநாதபுரம் (பெரம்பலூர் மாவட்டம்)
தமிழ்நாட்டின், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.
சொக்கநாதபுரம் என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டத்தில் ஆலம்பாடி பஞ்சாயத்தில் அரனாரை வடக்கில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் ஆகும். இரண்டு முதன்மை தெருக்களையும் மற்றும் சில குறுக்கு தெருக்களுடன் அமைந்துள்ளது. நல்ல இயற்கை சூழலுடனும் பசுமை நிறைந்த கிராமம். கிராமத்தின் உட்பகுதியில் மற்றும் வெளிப்பகுதிகளிலும் ஒன்பதிற்கும் மேற்பட்ட சிறு சிறு கோவில்களை கொண்டுள்ளது. இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் வேளாண்மை ஆகும். மக்களின் போக்குவரத்து மற்றும் அன்றாட தேவைகளுக்கு தேவையான நகரமாக பெரம்பலூர் நகரம் 4.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.