சொக்கநாதப் புலவர்

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்


சொக்கநாதப் புலவர் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் இருவர் வாழ்ந்தனர். இவர்களில் ஒருவர் சொக்கநாதப் புலவர் என்று அடைமொழி இல்லாமல் குறிப்பிடப்கடுகிறார். இவர் 18 ஆம் நூற்றாண்டில் காலத்தில் வாழ்ந்த புலவர். இருவரும் வெவ்வேறு புலவர்கள் எனக் காட்டுவதற்காக ஒருவரை அவரது ஊர்ப் பெயரோடு சேர்த்துப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எனக் குறிப்பிடலாயினர்.

சொக்கநாதப் புலவரின் 43 பாடல்கள் தனிப்பாடல் திரட்டு நூலில் இடம்பெற்றுள்ளன.
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடியனவாக 66 பாடல்கள் உள்ளன.
சொக்கநாதன் என்னும் பெயர் மதுரையில் குடிகொண்டுள்ள சிவபெருமானின் பெயர்களில் ஒன்று.

வரலாறு

தொகு

தொண்டை நாட்டு வள்ளலாகத் திகழ்ந்த கறுப்பண்ணன் (கறுப்பன்) இப் புலவரைப் போற்றிய வள்ளல். கறுப்பனின் தந்தை கஸ்தூரி பூபன். இவன் ஊர் மாவை. இது இக்காலத்தில் மாவூர் என வழங்கப்படுகிறது.

புலவரைப் போற்றிய மற்றொரு வள்ளல் வேங்கடராமன். இவன் மாதை என வழங்கப்படும் வல்லக்கோட்டையில் வாழ்ந்துவந்தான். இவனும் இவனது தம்பியரும் இப் புலவரை மாவூரில் வாழ்ந்த வள்ளல் கறுப்பண்ணன் வீடு வரையில் பல்லக்கில் சுமந்து வந்து புலவருக்குப் பெருமை சேர்த்தனர்.

இவர் ஊர் ஊராகச் சென்று சிவபெருமானின் திருவிளையாடல் செய்திகளை இவர் வேடிக்கையாக நயம்படப் பாடியுள்ள பாங்கினை விக்கிமூலத்தில் தரப்பட்டுள்ள இவரது பாடல்களில் காணலாம்.

வில்லாலும், கல்லாலும், செருப்பாலும் அடித்தவர்களுக்கெல்லால் அருள் பாலித்துவிட்டு மலரைப் போட்ட காமனை எரித்தாயே, ஏன்? - எனக் கூறும் பாடல் (7) சுவையான பாடல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொக்கநாதப்_புலவர்&oldid=3789577" இலிருந்து மீள்விக்கப்பட்டது