சொக்கப்பனை கொளுத்துதல்

சொக்கப்பனை கொளுத்துதல் என்பது சிவாலயங்களில் கார்த்திகை தீபத் திருவிழாவின் பொழுது நடைபெறும் நிகழ்வாகும். [1] இந்நிகழ்வு திருமால், முருகன் கோயில்களிலும் நடத்தப்படுகிறது. இந்நிகழ்வு பூச்சிகளைக் கவர்ந்திழுத்து அழிப்பதற்கு உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது.[2]

மதுரையிலுள்ள கிராமமொன்றில் திருக்கார்த்திகையையொட்டி ஏற்றப்பட்ட சொக்கப்பனை எரியும் காட்சி

பனைமரத்தினை வெட்டிச் சிவாலயத்தின் முன்முற்றத்தில் நட்டு, அதில் சில அடி உயரத்திற்குப் பனையோலைகளைக் கூம்பு போன்று அமைக்கின்றார்கள். இவ்வமைப்பு சொக்கப்பனை என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று சிவாலயக் கோபுர உச்சியில் தீபம் ஏற்றி, பஞ்ச மூர்த்திகளுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. அதன் பின் பஞ்ச மூர்த்திகளைச் சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்திற்கு எடுத்து வருகிறார்கள். பின்னர் பஞ்ச மூர்த்திகளுக்குத் தீபாராதனை காட்டப்பெற்று, அந்தத் தீபச்சுடரால் சொக்கப்பனையைக் கொளுத்துகின்றார்கள்.

எரிகின்ற சொக்கப்பனை அக்கினி மய லிங்கமாகப் பக்தர்களால் வணங்கப்படுகிறது.

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. சொக்கப்பனை - சக்தி விகடன் - 25 Nov, 2014
  2. உழவர்களுக்கு உதவும் கார்த்திகை தீபம், சொக்கப்பனை திருநெல்வேலி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு.பாலசுப்பிரமணியன்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொக்கப்பனை_கொளுத்துதல்&oldid=3066367" இலிருந்து மீள்விக்கப்பட்டது