சொக்கிலா ஐயர்

இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி

சொக்கிலா ஐயர் (Chokila Iyer) ஓர் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியும், இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுச் செயலாளரும் ஆவார். லலித் மான்சிங்கிற்கு பதிலாக 14 மார்ச் 2001 அன்று இவர் பொறுப்பேற்றார். 1964 தொகுதியைச் சேர்ந்த அதிகாரியான இவர், டார்ஜீலிங்கைப் பூர்வீகமாகக் கொண்டவர். மேலும், முன்னர் அயர்லாந்தில் இந்தியப் பணிக்குத் தலைமை தாங்கினார்.[1]

Chokila Iyer
23rd Indian Foreign Secretary
பதவியில்
March 14, 2001 - 29 June 2002
முன்னையவர்Mr. Lalit Mansingh
பின்னவர்Kanwal Sibal
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புDarjeeling, West Bengal, இந்தியா
துணைவர்G.C. Iyer
பிள்ளைகள்1
கல்விUniversity of North Bengal
வேலைCivil Servant (Indian Foreign Service)

பிற்காலப் பணிகள் தொகு

பட்டியல் சாதியினருக்கும் பட்டியல் பழங்குடியினருக்குமான தேசிய ஆணையம் தொகு

இவர், வெளியுறவுச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், பட்டியல் சாதியினருக்கும் பட்டியல் பழங்குடியினருக்குமான தேசிய ஆணைத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். அக்டோபர் 2008 இல் செயல்படத் தொடங்கிய இந்த ஆணையத்திற்கு இந்தியாவின் முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி ஜே. எஸ். வர்மா தலைமை தாங்கினார்.

புதிய ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம் தொகு

பிப்ரவரி 19, 2009 அன்று இவர் புதிய ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். நாட்டில் செய்தித் தொலைகாட்சி நிறுவனங்களால் ஒளிபரப்பப்படுவதற்கான நெறிமுறைகளையும், ஒளிபரப்பு தரங்களை செயல்படுத்தவும் இந்த ஆணையம் நியமிக்கப்பட்டது. செய்தி நிறுவனங்களுக்கான நெறிமுறைகள் மற்றும் ஒளிபரப்பு தரங்களை அமல்படுத்துவதற்கு அமைக்க "சிறந்த நபர்கள்" பிரிவின் கீழ் இவருக்கு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "At Home On Foreign Affairs". Outlook Magazine. 15 January 2001. Archived from the original on 21 January 2011. பார்க்கப்பட்ட நாள் 24 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொக்கிலா_ஐயர்&oldid=3760326" இலிருந்து மீள்விக்கப்பட்டது