சொற்பொருள் வகுப்பு

சொற்பொருள் வகுப்பு (Semantic class) என்பது, குறிப்பிட்ட சொற்பொருள் இயல்பைப் பொதுவாகக் கொண்ட சொற்களின் ஒரு தொகுதியைக் குறிக்கும். வெவ்வேறு சொற்பொருள் வகுப்புக்கள் ஒன்றையொன்று வெட்டக்கூடும். அதாவது அவற்றிடையே பொதுவான சொற்பொருள் இயல்புகளைக் கொண்ட சொற்தொகுதி இருக்கலாம்.எடுத்துக் காட்டாக, பெண் என்னும் பொருள் குறித்த சொற் தொகுதிக்கும், இளமை என்னும் பொருள் குறிக்கும் சொற் தொகுதிக்கும் பொதுவாகச் சிறுமி என்னும் பொருள் குறிக்கும் சொற்தொகுதி இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொற்பொருள்_வகுப்பு&oldid=3609690" இலிருந்து மீள்விக்கப்பட்டது