சொலனோசைட்டு
உயிரியலில், சொலனோசைட்டுகள் (Solenocyte) என்பது கசையிழைச் செல்களாகும். இவை கழிவு நீக்கம், சவ்வூடுபரவல் அழுத்தம் மற்றும் அயனிச் சமன்பாடு உள்ளிட்ட பணிகளைப் பல விலங்குகளில், முதுகுநாணிகளில் சில தலைக்காலிகளில் செய்கின்றது.[1]
இவை புரோட்டோநெப்ரிடியத்தின் துணை வகைகளாகும். இவை சுடர் செல்களிலில் காணப்படும் குற்றிலையிலிருந்து சொலனோசைட்டுகள் வேறுபடுத்தி அறியப்படுகிறது.
சொலனோசைட்டுகளைப் பயன்படுத்தி கழிவு நீக்கம் செய்யும் உயிரிக்கு உதாரணமாக பிராங்கியோஸ்டோமேட்டா உள்ளது.[2]