சொ. ஞானசம்பந்தன்
சொ. ஞானசம்பந்தன் (ஆங்கில மொழி: S. Gnanasambandan) (பிப்ரவரி 11, 1926 - மார்ச் 7, 2021) என்பது புதுச்சேரியில் பிறந்த தமிழ் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராவார். தமிழ்ப்புலவர் பட்டம் பெற்றவர். இவர் மலையப் பெருமாளின் தம்பி பேயரனாவார்.[1]
சொ. ஞானசம்பந்தன் | |
---|---|
பிறப்பு | சொ. ஞானசம்பந்தன் 11 பெப்ரவரி 1926 புதுச்சேரி |
இறப்பு | 7 மார்ச்சு 2021 | (அகவை 95)
தேசியம் | இந்தியர் |
கல்வி | தமிழ்ப்புலவர் பட்டம் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
சமயம் | இந்து |
பிள்ளைகள் | 2 மகள், 3 மகன் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகு1926 ஆம் ஆண்டு புதுச்சேரி காரைக்காலில் பிறந்தார். வியட்நாம் மற்றும் பிரான்சில் பணியாற்றி, தாயகம் திரும்பி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1986 இல் தலைமையாசிரியராகப் பணிநிறைவு செய்தார்.[2]
நூல்கள்
தொகு- தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி?
- சிரிப்புக்கதை சிங்கவேட்டை
- மாப்பசான் சிறுகதைகள்
- மறைந்த நாகரிகங்கள்
- பிரெஞ்சு இலக்கிய வரலாறு
- லத்தீன் இலக்கிய வரலாறு
மேற்கோள்கள்
தொகு- ↑ "மாங்குனி திருவிழாவும் மலையப் பெருமாள் பிள்ளையும்". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/jul/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2737272.html. பார்த்த நாள்: 13 November 2022.
- ↑ லத்தீன் இலக்கிய வரலாறு. மெய்யப்பன் தமிழாய்வகம். p. பின்னட்டை.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help)