சோஃராலஜி என்பது யோகாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஓய்வு நிலைக்கு கொண்டு செல்லும் முறை நுட்பம் ஆகும்.[1]

ஒரு கொலம்பிய நரம்பியல்-மனநல மருத்துவரான பேராசிரியர் அல்போன்சா கெய்செடோ இந்த முறையை உருவாக்கியுள்ளார்.[2]

1960 களில் தனது நோயாளிக்கு அன்றாட வாழ்க்கையில் அதிக அமைதியைக் அனுபவப்படுவதற்காக உதவும் நோக்கத்தில் உருவாக்கினார்.

1970 ஆம் ஆண்டில், முதல் சர்வதேச சோப்ரோலஜி  மாநாட்டில், மனித உணர்வு குறித்த தனது ஆய்வுகளிலிருந்து சோஃப்ரோலஜி பிறந்தது என்று கூறினார்.

சோஃப்ரோலஜி என்பது தத்துவம் மற்றும் வாழும் முறை என்ற இரண்டையும் உள்ளடக்கியது, இது ஒரு சிகிச்சை மட்டுமல்ல, தனிப்பட்ட வளர்ச்சி மேம்பாட்டு  நுட்பமும் கூட.

"சோஃப்ராலஜி என்பது  வாழ கற்றுக்கொள்ளுதல்" என அவர் கூறினார்.[3]

ஒரு சுவிஸ் சோஃப்ரோலாஜிஸ்டான ரேமண்ட் ஆப்ரேசோல், படகோட்டுதல், குத்துச்சண்டை, சைக்கிள் ஓட்டுதல், வரிப்பந்தாட்டம், குழிப்பந்தாட்டம், நீர்ப் பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளை விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சிகளாக அளித்துள்ளார்.

1967 மற்றும் 2004 க்கு இடையில் அப்ரெசோல் பயிற்சியளித்த விளையாட்டு வீரர்கள் 200 க்கும் மேற்பட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்றனர்.[4]

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோஃரோலஜி&oldid=2925672" இலிருந்து மீள்விக்கப்பட்டது