சோடச இலட்சுமி
சோடச இலட்சுமி என்பவர்கள் பதினாறு வகையான இலட்சுமிகளாவர். [1] சோடச என்றால் 16 என்று பொருளாகும். அட்ட இலட்சுமிகள் என்பவர்கள் எட்டு வகையான இலட்சுமிகளாவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு தலைகள் உள்ளன. அதனால் ஒவ்வொரு தலையையும் ஒரு இலட்சுமி என்ற வகையில் இந்த பதினாறு இலட்சுமிகள் கூறப்படுகிறார்கள். [1]
திருவரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள அட்டலட்சுமி மண்டபத்தில் இந்த பதினாறு இலட்சுமிகளும் சுதை சிற்பமாக உள்ளனர்.
சோடச இலட்சுமிகள்
தொகு- சவுந்தர்ய இலட்சுமி
- சவுபாக்கிய இலட்சுமி
- கீர்த்தி இலட்சுமி
- வீர இலட்சுமி
- மேதா இலட்சுமி
- விஜய இலட்சுமி
- சந்தான இலட்சுமி
- மேதா இலட்சுமி
- வித்யா இலட்சுமி
- துஷ்டி இலட்சுமி
- புஷ்டி இலட்சுமி
- ஞான இலட்சுமி
- சக்தி இலட்சுமி
- சாந்தி இலட்சுமி
- சாம்ராஜ்ய இலட்சுமி
- ஆரோக்கிய இலட்சுமி
- அன்ன இலட்சுமி
சோடச இலட்சுமி விரதம்
தொகுபதினாறு வகையான இலட்சுமிகளை வழிபடுதலை சோடச மகாலட்சு விரதம் என்று அழைக்கின்றனர்.[1] வளர்பிறை அஷ்டமியிலிருந்து தொடர்ந்து 16 நாட்கள் ஒவ்வொரு இலட்சுயையும் வழிபடுகின்றனர். சிலர் இரண்டு நாட்களுக்கு ஒரு அட்ட லட்சுமியை எடுத்து பூசை செய்வதும் உண்டு. இந்த வழிபாட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.
சோடச இலட்சுமி யாகம் இந்து சமயக் கோயில்களில் செய்யப்படுகின்றன. [2]
ஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 மகாலட்சுமி விரதம் தினமலர் பக்திமலர் – 01.09.2016 பக்கம் 23-24
- ↑ "அஷ்டமி தேய்பிறை சிறப்பு யாக பூஜை".