சோத்துப்பானை
சோத்துப்பானை என்பது சிறுமியர் நடிப்பு-விளையாட்டு. சோற்றுப்பானை என்பது இப்படி வழக்குச் சொல்லாக மருவியுள்ளது.
விளையாடுவோர் உட்கார்ந்திருப்பர். இருவர் சொல்லிக்கொண்டே நடிப்பர்; சோறாக்கும் செயல் நடித்துக் காட்டப்படும். நெல் குத்துதல், புடைத்தல், அரிசி உலையில் போடல், அகப்பையால் துளாவல், குழம்பு வைத்தல் மிதலான செயல்கள் சொல்லிக்கொண்டே நடித்துக் காட்டப்படும். சோறாக்கி முடிந்ததும் உரையாடல் நிகழும். அனைவரும் சேர்ந்து வினவுவதும், சமைத்த இருவரும் மாறி மாறி விடை சொல்வதுமாக இது இருக்கும்.
சோறு எங்கே
- பூனை தின்றுவிட்டது
பூனை எங்கே
- மரத்திலே ஏறிவிட்டது
மரம் எங்கே
- அடுப்பெரிச்சாச்சு
அடுபெரிச்ச சாம்பல் எங்கே
- பல் விளக்கியாச்சு
பல் விளக்கித் துப்பிய எச்சில் எங்கே
- புல்லுக்கட்டில் துப்பியாச்சு
புல்லுக்கட்டு எங்கே
- மாடு தின்னுபுடுச்சு
மாடு எங்கே
- பாட்டி வீட்டிலே
பாட்டி எங்கே
- செத்துப்போச்சு
இதைச் சொன்னதும் எல்லாரும் எழுந்து ஓடிவிடுவர். பின்னர் வந்து கூடி அடுத்த இருவர் நடிக்கும் மறு ஆட்டம்.
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980