சோனல் அம்பானி

சோனல் அம்பானி (Sonal Ambani) ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார். தாய்-மகள் உறவைக் கொண்டாடும் ஒரு புகைப்பட இதழில் மதர்ஸ் அண்டு டாட்டர்ஸ் என்ற தொடர் வெளிவந்தது. 2004ஆம் ஆண்டில் இவர் மிகவும் பிரபலமானவர். [1] மதர்ஸ் அண்டு டாட்டர்ஸ் தொடரின் தொடர்ச்சியாக ஃபாதர்ஸ் அண்டு சன்ஸ் என்ற தொடரை முடித்த போது அம்பானி தனது குழந்தைகளுக்கு அதைப் படிப்பதற்கு வழிகாட்டினார். [2] குழந்தைகள் மற்றும் பதின்வயது இளைஞர்களுக்கு நிதி சேவைகளை வழங்குவதற்கான அமைப்புகள் மற்றும் முறைக்கான காப்புரிமையையும் இவர் பெற்றுள்ளார்.

2010ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் உள்ள எப்ஐசிசிஐ இன் பெண்கள் அமைப்பான எப்எல்ஓ இன் தலைவராக இவர் பெயரிடப்பட்டார். [3]

சோனல் அம்பானி ஒரு திறமையான கலைஞரும் ஆவார், தொடர்ச்சியான பெரிய அளவிலான விலங்கு சிற்பங்கள் அவரது படைப்புகளில் அடங்கும். இவரது ஒவ்வொரு படைப்பின் பின்னணியிலும் சமாதானத்திற்கான அடையாளத்தைக் கொண்டிருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. "The Rediff Interview/Sonal Vimal Ambani". Rediff.com. July 5, 2004.
  2. "Ambani kids' labour of love released". DNA India. July 20, 2009.
  3. "Sonal Ambani to head FLO in Ahmedabad". DNA India. April 15, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனல்_அம்பானி&oldid=3090524" இலிருந்து மீள்விக்கப்பட்டது