சோபானம் என்பது இந்திய இந்துக் கோயிற் கட்டடக் கலை மரபில் படிகளைக் குறி்க்கப் பயன்படும் கலைச்சொல் ஆகும். வீடுகள் மற்றும் மாளிகைகளில் படிகள் அமைக்கப்படுவதுபோல இந்துக் கோயில்களின் கீழ்த் தளத்திலிருந்து மண்டபங்களை அடைவதற்கு சோபானம் அமைக்கப்படுவது வழமையாகும். சோபானத்தின் கைப்பிடிகளில் அலங்கார வேலைப்பாடுகள் இடம்பெறும். குறிப்பாக சுருள்யாளி வடிவம் மற்றும் கொடி வளைவுகள் முதலான வடிவங்கள் இடம்பெறுவதுண்டு. தஞ்சைப் பெரிய கோயில், தாராசுரம், திரிபுவனம் முதலான சோழர்காலக் கோயில்களில் இவ்வமைப்பிைனத் தெளிவாகக் காணமுடியும். விஜயநகர நாயக்கர் பாணியிலமைந்த கோயில்களிலும் சோபானங்கள் அமைந்துள்ளன.

இலங்கையில் அமைந்த பெளத்தக் கட்டுமானங்களும் இம் மரபைப் பின்பற்றியிருப்பதைக் காணலாம். இதில் யாளி வடிவங்களுக்குப் பதிலாக சிங்க வடிவங்கள் அமைந்திருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபானம்&oldid=3680979" இலிருந்து மீள்விக்கப்பட்டது