சோபா நகரப் பேரங்காடி

இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள பேரங்காடி

சோபா நகரப் பேரங்காடி (Sobha City Mall) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருச்சூர் நகரத்தின் புழாக்கல் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகம் 2015 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 17 அன்று திறக்கப்பட்டது.[1][2] வணிக வளாகம் 4.7 ஏக்கர் (1.9 எக்டேர்) நிலத்தில் கட்டப்பட்டு 450,000 சதுர அடி (42,000 சதுர மீட்டர்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[1][2] பேராங்காடி முற்றிலுமாக மையமாக குளிரூட்டப்பட்டிருக்கிறது. ஐனாக்சு லீசர் நிறுவனத்தின் ஆறு திரையரங்குகள் இப்பேரங்காடியில் இயங்குகின்றன. ஆடம்பர வணிக உணவு விடுதிகள், அலுவலக இடம், உணவகங்கள் மற்றும் 600 கார்களை நிறுத்தும் வசதியை சோபா நகரப் பேரங்காடி வழங்குகிறது.[3][4]

சோபா நகரப் பேரங்காடி
இரவு நேரத்தில் சோபா நகரப் பேரங்காடி
இருப்பிடம்:இந்தியா, திருச்சூர், புழாக்கல்
அமைவிடம்10°33′00″N 76°10′59″E / 10.549886°N 76.183081°E / 10.549886; 76.183081
திறப்பு நாள்17 December 2015[1][2]
உரிமையாளர்சோபா நிறுவனம்
கட்டிடக் கலைஞர்y
மொத்த வணிகத் தளப் பரப்பளவு450,000 சதுர அடிகள் (42,000 m2)[1][2]
தள எண்ணிக்கை3
வலைத்தளம்www.sobhacity.co.in

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Sobha City Mall".
  2. 2.0 2.1 2.2 2.3 "Sobha City Mall Details".
  3. "Sobha City Mall: Thrissur, Kerala's cultural capital, gets a new landmark". Zee News. 18 December 2015. http://zeenews.india.com/news/kerala/sobha-city-mall-thrissur-keralas-cultural-capital-gets-a-new-landmark_1835809.html. பார்த்த நாள்: 20 August 2018. 
  4. "Sobha City in Thrissur by 2011". Projects Monitor. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபா_நகரப்_பேரங்காடி&oldid=3060761" இலிருந்து மீள்விக்கப்பட்டது