சோபா பத்னாவிசு

இந்திய அரசியல்வாதி

சோபா பத்னாவிசு (Shobha Fadnavis) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த இவர் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக மகாராட்டிர அரசியலில் இயங்கினார்.[1] சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சோபா பத்னாவிசு மகாராட்டிர சட்டமன்றக் குழுவின் உறுப்பினராகவும் மகாராட்டிர அரசாங்கத்தில் ஓர் அமைச்சராகவும் இருந்துள்ளார்.[2][3] 1990 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை சாவோலி சட்டப்பேரவை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2008 ஆம் ஆண்டில் இந்த தொகுதி ஒழிக்கப்படும் வரை இத்தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். மகாராட்டிராவின் இரண்டு முறை முதல்வராக இருந்த தேவேந்திர பத்னாவின் அத்தையாகவும் இவர் அறியப்படுகிறார்.

சந்திரபூர் உயர்நிலைப் பள்ளியில் இவர் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.[4]

சோபா பத்னாவிசு தனது அரசியல் வாழ்க்கையில் பிரத்யஞ்சா (வாழ்க்கை வரலாறு) மற்றும் தண்டோலா செடிச்சா (விவசாயிகள் மீது) போன்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. BJP reinforces hold over post of Oppn leader
  2. school-buses-used-for-public-transport-in-chandrapur
  3. Shiv Sena-BJP may elect MLCs unanimously
  4. "Shobha Fadanvis(Bharatiya Janata Party(BJP)):Constituency- SHOBHA FADANVIS(ELECTED BY MLAS) - Affidavit Information of Candidate:", myneta.info, பார்க்கப்பட்ட நாள் 2024-04-03
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபா_பத்னாவிசு&oldid=3920884" இலிருந்து மீள்விக்கப்பட்டது