சோபியா பிர்தௌஸ்

சோபியா பிர்தௌஸ் (ஒடியா: ସୋଫ଼ିଆ ଫ଼ିର୍ଦ୍ଦୌସ୍) (பிறப்பு: 1992) இந்தியாவின், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி மற்றும் 2024 ஆம் ஆண்டு ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில் பாராபதி-கட்டாக் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினர். ஒடிசாவில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]

பிறப்பும் கல்வியும்

தொகு

சோபியா மெஹந்திபூர், சாந்தினிசௌக், லால்பாக் காவல் எல்லை, கட்டாக்கைச் சேர்ந்தவர். இவர் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ முகமது மொகிமின் மகள் ஆவார்.

அவர் 2007 இல் கட்டாக்கில் உள்ள செயின்ட் ஜோசப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஐசிஎஸ்இ முடித்தார், 2009 இல் கட்டாக்கில் உள்ள ராவன்ஷா ஜூனியர் கல்லூரியில் பிளஸ் டூ படித்தார். பின்னர், பி.டெக். 2013 இல் புவனேஸ்வரில் உள்ள KIIT பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜியில் சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். 2022 இல் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எக்ஸிகியூட்டிவ் ஜெனரல் மேனேஜ்மென்ட் திட்டத்தையும் முடித்துள்ளார்.[2]

குடும்பம்

தொகு

இவர் ஷேக் மைராஜுல் ஹக் என்பவரை மணந்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்

தொகு

சோபியா 2024 ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸின் சார்பில் பாராபதி-கட்டாக் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் பூர்ண சந்திர மகாபத்ராவை 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Barabati-Cuttack Election Result 2024 LIVE Updates Highlights: Assembly Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  2. https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter?_token=DQVMsxtbpI1vru0XTGskHpeIytvAqnKtGJSCfPFP&electionType=24-PC-GENERAL-1-46&election=24-AC-GENERAL-3-47&states=S18&constId=90&page=2
  3. "Election commission of india".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபியா_பிர்தௌஸ்&oldid=4090403" இலிருந்து மீள்விக்கப்பட்டது