சோமவார விரதம்

சோமவார விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை தோறும் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும். இவ்விரதத்தை உபவாசமாக அநுட்டிப்பது உத்தமமானது. இவ்விரதத்தை வாழ்நாள் முழுவதும் அநுட்டித்தல் வேண்டும். அப்படிச் செய்ய முடியாதவர்கள் பன்னிரண்டு வருட காலமாயினும், மூன்று வருட காலமாயினும் அநுட்டிக்கலாம்.[1] [2]

மேற்கோள்கள்

தொகு
  1. சோமவார விரதம்
  2. சோமவார விரதம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமவார_விரதம்&oldid=2332531" இலிருந்து மீள்விக்கப்பட்டது