சோம. இளவரசு
என்பவர் நன்னூலுக்கு உரையெழுதிய தமிழ்ப் பேராசிரியராவார்
சோம. இளவரசு (டிசம்பர் 25, 1934 - மே 31, 1986) என்பவர் நன்னூலுக்கு உரையெழுதிய தமிழ்ப் பேராசிரியராவார். மேலும் மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், நூலாசிரியர், உரையாசிரியராகவும் திகழ்ந்தார்.[1]
புலவர் சோம. இளவரசர் | |
---|---|
பிறப்பு | கீழச்சீவல்பட்டி, தமிழ்நாடு | 25 திசம்பர் 1934
இறப்பு | 31 மே 1986 | (அகவை 51)
தொழில் | பேராசிரியர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி நிலையம் | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுசோமசுந்தரம் செட்டியார், கல்யாணி ஆச்சி தம்பதியினரின் மூத்த மகனாகக் கீழச்சீவல்பட்டி சூரக்குடியில் 1934 ஆம் ஆண்டு பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். முதுகலைத் தமிழ்ப் பட்டம் பெற்றார். 1957-58 அரசர் அண்ணாமலை விருதினைப் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 28 ஆண்டுகள் தமிழ்த் துறையில் பணியாற்றினார். இவர் 1963ஆம் ஆண்டு எழுதிய இலக்கண வரலாறு நூல் உட்பட இவரது நூல்கள் பல்வேறு கல்லூரிகளில் பாடத்திட்டமாக உள்ளன.[2][3][4]
எழுதிய நூல்கள்
தொகு- இலக்கண வரலாறு
- இலக்கிய வரலாறு
- திருவருணைக் கலம்பகம்
- 20 நூற்றாண்டுகளில் தமிழ்
- காப்பியத் திறன்
- பரணி இலக்கியம்
- நீதி சூடி
- நன்னூல் உரை- எழுத்ததிகாரம்
- நன்னூல் உரை - சொல்லதிகாரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ நகரத்தார் கலைக்களஞ்சியம் (2002 ed.). மெய்யப்பன் தமிழாய்வகம். p. 70.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ "இலக்கிய வரலாறு". த.இ.க மின்னூலகம். பார்க்கப்பட்ட நாள் 20 October 2023.
- ↑ "இளங்கலைப் பாடத்திட்டம்" (PDF). சேலம் அரசுக் கல்லூரி. பார்க்கப்பட்ட நாள் 20 October 2023.
- ↑ "முதுகலைப் பாடத்திட்டம்" (PDF). பெரியார் பல்கலைக் கழகம். பார்க்கப்பட்ட நாள் 20 October 2023.