சோற்றுக்கற்றாழை பானம்

சோற்றுக்கற்றாழை பானம் உடலுக்குக் குளிர்ச்சி, ஆரோக்கியம் தரும் பானங்கள் பல உண்டு. எவ்வித செயற்கை நிறமூட்டி, மணமூட்டி எதுவும் சேர்க்காமல் ஆரோக்கியமான சோற்றுக்கற்றாழை பானம் உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கக்கூடியது.

எல்லா இடங்களிலும் எளிதில் சோற்றுக் கற்றாழை வளர்வதைக் காணலாம். பானகம் தயாரிக்க தேவையானவை நன்கு முதிர்ந்த சோற்றுக்கற்றாழை மடல் -1. இதன் அடிப்பகுதி பருமனானதாக இருக்க வேண்டும். இம்மடலை நன்கு கழுவியபின் இரு பக்க ஓரங்களில் உள்ள முட்களை நீக்க வேண்டும். மடலின் உள்ளே உள்ள சதைப் பகுதியை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். இதை கண்ணாடி புட்டியில் போட்டு, அத்துடன் அரை கப் தேன் மற்றும் 50 மி.லி. ஆல்கஹால் ஊற்றி நன்கு கலந்து புட்டியை மூடவேண்டும். இக்கலவையை 24 மணி நேரத்திற்குப் பின் தினமும் மூன்று வேலை ஒரு தேக்கரண்டி அளவிற்கு உணவிற்கு முன் உண்ண வேண்டும். ஒரு முறை இவ்வாறு தயாரித்த பானகத்தை 10 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. மீண்டும் இவ்வாறு தயாரித்து உண்ணலாம். இப்பானகம் உண்பதால் உடலில் புது செல்களை உருவாக்குகிறது. கேன்சர் செல்களை அழிக்கக் கூடியதாக இது செயல்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. சித்தமருத்துவர் (2021-07-21). "சோற்றுக்கற்றாழை பயன்கள்". Update Thamizha (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோற்றுக்கற்றாழை_பானம்&oldid=3601725" இலிருந்து மீள்விக்கப்பட்டது