சோலங் லூசிகு சிமிரே

காங்கோ ஜனநாயகக் குடியரசைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர்

'சோலங் லூசிகு சிமிரே (Solange Lusiku Nsimire) (1972 - அக்டோபர் 14, 2018) காங்கோ மக்களாட்சிக் குடியரசைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளரும், பெண்கள் உரிமை ஆர்வலரும் ஆவார். காங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்கில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் எழுதப்பட்ட செய்தித்தாளை நடத்திய முதல் பெண்மணி ஆவார். [1]

2007 இல் புகாவுவை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன பத்திரிகையான Le லீ சாவெரைன் என்பதை திருத்தத் தொடங்கினார்.[2] இவரது பணியால் நலிந்த நிலையில் இருந்த செய்தித்தாளை மீட்டெடுக்க முடிந்தது. ஆனால் இவரது பத்திரிகை நடவடிக்கைக்காக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார். 2008 ஆம் ஆண்டில் இவரது வீடு மூன்று முறை தாக்கப்பட்டது. [1] ஒரு சந்தர்ப்பத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் இவரது கணவர் மற்றும் குழந்தைகளைக் கட்டி வைத்துவிட்டு குடும்பச் சேமிப்பைத் திருடிச் சென்றனர். [2]

2014 இல் சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளைளையின் தைரியமான பத்திரிகையளர்களுக்கான விருதை வென்றார். [3]

இறப்பு

தொகு

அக்டோபர் 14, 2018 அன்று கின்ஷாசாசாவில் இறந்தார் [1]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Aviva Stahl, Solange Lusiku Nsimire — The Congolese journalist who fought corruption and championed women, Women's Media Center, November 27, 2018.
  2. 2.0 2.1 Eleanor Klibanoff, A Congolese Mother Of Six Is Honored For Her Death-Defying Journalism, National Public Radio, October 27, 2014. Accessed July 27, 2020.
  3. "2014 Awardees". IWMF. Archived from the original on 2014-05-29. பார்க்கப்பட்ட நாள் 2014-06-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலங்_லூசிகு_சிமிரே&oldid=3659040" இலிருந்து மீள்விக்கப்பட்டது