சோலுயீன் { Soluene) என்பது உயிரிப் பொருட்களை (திசு கரைப்பான்) கரைப்பதற்கு உதவும் ஒரு வேதிப்பொருளாகும். தொலுயீன் சேர்மத்திலிருந்து உருவாக்கப்படும் இச்சேர்மம் ஒரு கரிமக் காரமாகும் [1] . பெர்க்கின்-எல்மர் என்ற அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பு விளைபொருளுக்கு வழங்கப்பட்டுள்ள வர்த்தகப் பெயர் சோலுயீன் ஆகும்.

முடி போன்ற கடினமான கரிம சேர்மங்களையும் கார நீராற்பகுப்பு மூலம் கரைத்துவிடக் கூடிய வேதிப்பொருளாக சோலுயீன் குறிப்பிடத்தக்க ஒரு சேர்மமாகக் கருதப்படுகிறது [2]. இவ்வினையில் சோலுயீனுக்குப் பதிலாக நீர் அடிப்படையிலான கரைப்பிகள் மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Soluene® 350, 500mL". PerkinElmer. பார்க்கப்பட்ட நாள் 2012-07-31.
  2. "LSC in Practice : Solubilization of Hair" (PDF). Perkinelmer.com. பார்க்கப்பட்ட நாள் 2013-10-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலுயீன்&oldid=2443578" இலிருந்து மீள்விக்கப்பட்டது