சோழகன் பேட்டை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாடு மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை வட்டத்தில், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள சோழகன்பேட்டை கிராமம், கிழக்கு கடற்கரை சாலையில் சுந்தரபாண்டியன்பட்டினத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த கிராமமான அஞ்சல் சுட்டு எண் 623 406 ஆகும். இதனருகில் உள்ள அஞ்சலகம் எஸ்.பி.பட்டிணத்தில் உள்ளது. தொலைபேசி குறியீடு எண் 04561 ஆகும். இக்கிராமத்தினரின் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும். இதன் வருவாய் வட்டத் தலைமையிடமான திருவாடானையிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும்; தொண்டிக்கு வடக்கே 13 கி.மீ. தொலைவிலும், சுந்தரபாண்டியன்பட்டினத்திற்கு அருகிலும், மாவட்டத் தலைமையிட நகரமான இராமநாதபுரத்திற்கு வடக்கே 67 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சோழகன் பேட்டை திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. அருகில் உள்ள கிராமங்கள் பாசிப்பட்டினம், வட்டாணம் (7 கிமீ), சுந்தரபாண்டியன்பட்டினம் தொண்டி, திருவெற்றியூர், நம்புதாளை ஆகும். சோழகன் பேட்டை அருகமைந்த நகரங்கள் தேவகோட்டை காரைக்குடி, இராமன் நாடு மற்றும் பரமக்குடி ஆகும். சோழகன் பேட்டை வடக்கில் ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம், தெற்கில் இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேற்கில் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இக்கிராமத்தில் புகழ் பெற்ற தெய்வமாக சந்தன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பத்து ஊர் கிராமத்தினரால் நிர்வாகிக்கப்படுகின்றது. மாசி மாதம் மஹா சிவராத்திரி அன்று வெகு விமரிசையாக திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் சேலம் பறவைக்காவடி பிரமாண்டமான முறையில் ஊர்வலம் வருகின்றது. இவ்வூரில் விநாயகர் ஆலயம் கருப்பன் ஆலயம் காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் செபஸ்தியார் திருத்தலம் குரைசி அப்பா தர்கா போன்ற மும்மத வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. ஜாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.