சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
சோழன் நெய்தலங்கானல் இளச்சேட்சென்னி என்பவன் சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன் ஆவான். இவனைஊன்பொதி பசுங்குடையார் பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. [1]
- இளஞ்சேட்சென்னி என்னும் பெயருடன் ஐந்து சோழ மன்னர்கள் உள்ளனர்.
நெய்தலங்கானல் என்னுமிடத்தில் இருந்துகொண்டு ஆண்ட இவனைப் புலவர் ‘நெய்தலங்கானல் நெடியோன்’ எனக் குறிப்பிடுகிறார். நெடியோன் என்னும் பெயர் திருமாலைக் குறிக்கும்.
- இவன் இயல்பு
- இவன் மற்போரில் வல்லவன். [2]
- கொடை
- மணக்க மணக்கத் தாளித்த அமிழ்தம் போன்ற உணவை வந்தவர் யாராயிந்தாலும் வழங்கினான்.
- இவனுக்குப் புலவர் கூறிய அறிவுரை
- வழிபடுவோர் உள்ளத்தைப் புரிந்துகொள்.
- மற்றவர்களைப் பழிப்பவர் சொல்லை நம்பாதே.
- உண்மை கண்டபின் தண்டனை வழங்கு
- வணங்கினால் தண்டனையைக் குறைத்துக்கொள்.