சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி
(சோழன் வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி சங்ககாலச் சோழமன்னர்களில் ஒருவன். இவன் சோழன் வேல்பஃறடக்கை பெருநற்கிள்ளி எனவும் வழங்கப்பட்டுள்ளான்.
இவனுக்கும் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனுக்கும் இடையே திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் போர் நடந்தது. போரில் இருவரும் தம் படைகளைப் போரிடவேண்டாம் என்று நிறுத்திவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இவ்வாறு கோரிடும் முறைக்கு ‘அறத்தின் மண்டுதல்’ என்று பெயர். இந்தப் போரில் இருவரும் போர்க்களத்திலேயே மாண்டனர்.[1][2]
குடக்கோ நெடுஞ்சேரலாதன் போர்க்களத்தில் குற்றுயிரும் கொலையுயிருமாகக் கிடந்தபோது புலவர் கழாத்தலையார் அவனது கழுத்திலிருந்த மணியாரம் என்னும் அணிகலனைக் கொடையாகக் கேட்டுப் பெற்றார்.[3]
அடிக்குறிப்பு
தொகு- ↑ கழாத்தலையார் புறநானூறு 62,
- ↑ பரணர் புறநானூறு 63
- ↑ கழாத்தலையார் புறநானூறு 368