சோவியத் குழுவுள்ள நிலா நிகழ்ச்சிநிரல்கள்

சோவியத் குழுவுள்ள நிலா நிகழ்ச்சிநிரல்கள் (Soviet crewed lunar programs) என்பது அமெரிக்க அப்பல்லோ திட்டத்துடன் போட்டியிட்டு நிலாவில் மனிதர்களை தரையிறக்க சோவியத் யூனியன் பின்பற்றிய தொடர்ச்சியான திட்டங்களாகும். சோவியத் அரசாங்கம் அத்தகைய போட்டியில் பங்கேற்க மறுத்தது , ஆனால் 1960 களில் இரண்டு திட்டங்களை கமுக்கமாகப் பின்பற்றியது. சோயுஸ் 7 கே - எல் 1 (புரோட்டான் - கே ராக்கெட் மூலம் தொடங்கப்பட்ட சோண்ட் விண்கலம்) மற்றும் சோயுஸ் 8 கே - லோக் மற்றும் எல் கே விண்கலத்தைப் பயன்படுத்தி நிலாத் தரையிறக்கம் N1 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. 1968 டிசம்பர் 24 - 25 அன்று முதல் குழு நிலா வட்டணையின் இரட்டை அமெரிக்க வெற்றிகளைத் தொடர்ந்து (அபோலோ 8) மற்றும் ஜூலை 20,1969 அன்று முதல் நிலவு தரையிறக்கம் (அபோலோ 11) , தொடர்ச்சியான பேரழிவு N1 தோல்விகளால் இரண்டு சோவியத் திட்டங்களும் இறுதியில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. புரோட்டான் அடிப்படையிலான சோண்ட் திட்டம் 1970 இல் நீக்கம் செய்யப்பட்டது. N1 - L3 திட்டம் 1974 இல் நடைமுறையில் நிறுத்தப்பட்டது. இது 1976 இல் அதிகாரப்பூர்வமாக நீக்கம் செய்யப்பட்டது. சோவியத் விண்வெளி வீரர்கள் ஒருபோதும் நிலாவைச் சுற்றி வரவோ அல்லது தரையிறங்கவோ இல்லை. இரண்டு சோவியத் திட்டங்களின் விவரங்களும் 1990 வரை கமுக்கமாகவே வைக்கப்பட்டிருந்தன , பின்னர் சோவியத் அரசு அவற்றைத் திறந்த அணுகுமுறைக்(கிளாஸ்னோஸ்த்) கொள்கையின் கீழ் வெளியிட இசைந்தது.

காட்சிமேடை

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு