சோவெனெல் மொயீசு

சோவெனெல் மொயீசு (Jovenel Moïse; 26 சூன் 1968 – 7 சூலை 2021) எயிட்டியத் தொழிலதிபரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2017 முதல் 2021 இல் படுகொலை செய்யப்படும் வரை எயிட்டியின் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.

சோவெனெல் மொயீசு
Jovenel Moïse
2019 இல் மொயீசு
எயிட்டியின் அரசுத்தலைவர்
பதவியில்
7 பெப்ரவரி 2017 – 7 சூலை 2021
முன்னையவர்யோசெலெர்ம் பிரிவெர்த் (பதில்)
பின்னவர்குளோட் யோசெப்பு (பதில்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1968-06-26)26 சூன் 1968
துரோ-டு-நோர்டு, எயிட்டி
இறப்பு7 சூலை 2021(2021-07-07) (அகவை 53)
பேட்டியன்-வில்லா, எயிட்டி
காரணம் of deathசுடப்பட்டுப் படுகொலை
அரசியல் கட்சிதெத் கேல் கட்சி[1]
துணைவர்மார்ட்டீன் மொயீசு (1996)
பிள்ளைகள்3

2016 நவம்பர் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மொயீசு 2017 பெப்ரவரியில் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.[2][3] 2019-ஆம் ஆண்டில், நாட்டில் அரசியல் குழப்பநிலை தோன்றியது. மொயீசு பதவி விலகுவதற்கான கோரிக்கைகள் நாட்டில் பெரும் நெருக்கடியாக மாறியது.[4][5]

2021 சூலை 7 அதிகாலையில், 28 பேர் அடங்கிய கும்பல் ஒன்று மொயீசின் இல்லத்தின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியது.[6] இதன்போது மொயீசு சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி மார்ட்டீன் படுகாயமடைந்தார்.[7][8] பதில் பிரதமர் குளோட் யோசப் தனது அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "அடையாளம் தெரியாத நபர்கள் மொயீசு மீது தாக்குதல் நடத்தியது, அவர்களில் சிலர் எசுப்பானிய மொழியில் பேசினர்" என்று குற்றம் சாட்டினார்.[9] மொயீசின் படுகொலையைத் தொடர்ந்து, இடைக்காலப் பிரதமர் குளோட் யோசப் நாட்டின் அதிகாரத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.[10]

மேற்கோள்கள் தொகு

  1. "Our Campaigns – Political Party – Haitian Tèt Kale (PHTK)". www.ourcampaigns.com. Archived from the original on 7 July 2021. பார்க்கப்பட்ட நாள் 28 May 2021.
  2. cep_haiti (28 November 2016). "Résultats préliminaires des élections présidentielles du 20 Novembre 2016 pic.twitter.com/i9GsrkkU8p" (Tweet). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. Brice, Makini (29 November 2016). "Businessman Moise wins Haiti election in first round – provisional results". Port-au-Prince: ராய்ட்டர்ஸ் இம் மூலத்தில் இருந்து 7 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200807204157/https://uk.reuters.com/article/uk-haiti-elecion-idUKKBN13O08L. 
  4. Padgett, Tim. "Moïse Mess: Haiti's Political Standoff – And Humanitarian Crisis – Won't Likely End Soon". www.wlrn.org. Archived from the original on 8 October 2019. பார்க்கப்பட்ட நாள் 15 December 2019.
  5. "Miami Herald". Archived from the original on 6 October 2019. பார்க்கப்பட்ட நாள் 8 October 2019.
  6. Dupain, Etant; Lemos, Gerardo; Kottasová, Ivana; Hu, Caitlin. "Haiti President Jovenel Moise assassinated in attack on his residence". CNN. Archived from the original on 7 July 2021.
  7. EUGENE, Ody BIEN. "Le président Jovenel Moïse blessé mortellement lors d'une attaque armée, confirme le PM Claude Joseph – Juno7". www.juno7.ht (in பிரெஞ்சு). Archived from the original on 7 July 2021. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
  8. Ma, Alexandra. "The president of Haiti has been killed". Business Insider (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 7 July 2021. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
  9. "Haiti - FLASH : President Jovenel Moïse Assassinated by mercenaries (official) Updated 7am + video - HaitiLibre.com : Haiti news 7/7". Haiti Libre.com. 7 July 2021. Archived from the original on 7 July 2021. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
  10. "The assassination of Haiti's president: What happened, and what could be next" (in en-US). Global News. https://globalnews.ca/news/8012305/haiti-president-assassinated-what-happened/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோவெனெல்_மொயீசு&oldid=3193501" இலிருந்து மீள்விக்கப்பட்டது