சௌபர்னிகா நதி

சௌபர்னிகா நதி (கன்னடம்: ಸೌಪರ್ಣಿಕ ನದಿ, Souparnika River) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் குந்தாபுரா மற்றும் கங்கோள்ளி வட்டங்கள் வழியாக ஓடும் ஒரு ஆறு. வராஹி ஆறு, சக்ரா ஆறு, கேடக நதி மற்றும் குப்ஜா நதி ஆகியவற்றுடன் இணைந்துபின் அரபிக்கடலில் கலக்கின்றது.

புனித நதி தொகு

கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு அருகே செல்லும் இந்த ஆற்றை அககோவிலுக்கு வரும் பக்தர்கள் புனிதநதியாகக் கருதுகின்றனர்.[1]

சுபர்னா என்று அழைக்கப்படும் கழுகு இந்த ஆற்றின் கரையில் தவம் செய்து, இரட்சிப்பை அடைந்ததால், இதன் பெயர் சௌபர்னிகாவானதாகக் கருதப்படுகிறது. அறுபத்தாறு வகையான வெவ்வேறு மூலிகைகள் மற்றும் வேர்களின் தன்மைகளை உட்கொண்டு பாய்ந்து வருவதால் இந்த ஆறு நீராடுபவர்களின் நோய்களை குணப்படுத்தும் தன்மையுடையதாக நம்பப்படுகிறது.

சான்றுகள் தொகு

  1. Prabhu, Ganesh (27 February 2014). "Souparnika river chokes on sewage, plastic". The Hindu, Newspaper. http://www.thehindu.com/news/cities/Mangalore/souparnika-river-chokes-on-sewage-plastic/article5731932.ece. பார்த்த நாள்: 29 August 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌபர்னிகா_நதி&oldid=3505141" இலிருந்து மீள்விக்கப்பட்டது