சௌராட்டிரம் (இராகம்)
இராகம். இசைப் பண்
சௌராஷ்டிர இராகம் 17வது மேளகர்த்தா இராகமாகிய சூர்யகாந்தத்தின் ஜன்ய இராகம் ஆகும். பண்டைய தமிழிசைப் பண்களில் வியாழக்குறிஞ்சி என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1] பக்தி சுவை மிக்க சுபகரமான இராகமானதால் இதை எப்போதும் பாடலாம்.
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி1 க3 ம1 ப த2 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம1 க ம ரி1 ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3) சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இதர அம்சங்கள்
தொகு- இது ஒரு சம்பூர்ண இராகம். வக்ர இராகம்.
- அவரோகணத்தில் மத்யமம் ச நி தா பமகம என்று வக்ரமாக இடம்பெறுகிறது .ஆதலால் இது ஒரு வக்ர இராகம் ஆகும்.
- அந்நிய சுரமான கைசிகி நிஷாதம் ‘ப த நி த பா ’ என்னும் பிரயோகத்தில் வருகிறது
- இந்த இராகத்தை கச்சேரி, பஜனை, காலஷேபம், நாடகம் முதலிய நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகின்றது
உருப்படிகள்
தொகுதேவாரம்
தொகு- பந்தத்தால் திருஞானசம்பந்தர் ஆதி தாளம்
கிருதி
தொகு- ஸ்ரீ கணபதினி தியாகராஜர், ஆதி தாளம்
- அல்ல கல்லோல தியாகராஜர், ஆதி தாளம்
- ஏமனி நேரநம்மு தியாகராஜர், சாபு தாளம்
- ஏநோமு தெலியக தியாகராஜர், சாபு தாளம்
- கும கும குமயணி தியாகராஜர், மிஸ்ரசாபு தாளம்
- எந்நாடோ ரக்ஷிம்சுடே தியாகராஜர், ஆதி தாளம்
- பாஹி ராம ஹரே தியாகராஜர், ரூபக தாளம்
- ராம ராம கோவிந்தா தியாகராஜர், ஆதி தாளம்
- கால சம்ஹார கருணாகர தியாகராஜர், ஆதி தாளம்
- சூர்ய மூர்த்தே முத்துஸ்வாமி தீட்சிதர் துருவ தாளம்
- நின்னு ஜூசி பட்டணம் சுப்பிரமணிய ஐயர் ஆதி தாளம்
- எங்கே தேடி கோபால கிருஷ்ண பாரதியார் ஆதி தாளம்
- விநாயகா சரணம் அருணாசலக் கவிராயர் ஆதி தாளம்
- சரணம் சரணம் அருணாசலக் கவிராயர் சாபு தாளம்
- என் செய்வோமென நகரம் முத்துசாமிக் கவிராயர் ஆதி தாளம்
- அருள்கின்றதெப்பொழுது இலட்சுமணப் பிள்ளை ஆதி தாளம்
- மங்களமே சுப மங்களமே பெரியசாமித்தூரன் , ஆதி தாளம்
- சகல கலாநாயிகே பெரியசாமித்தூரன் , ஆதி தாளம்
- மந்திர வடிவனோ பெரியசாமித்தூரன் , ஆதி தாளம்
- வலசி வச்சியுன்னா பொன்னய்யாப்பிள்ளை , அட தாளம்
- ரங்கநாதுடே ,பொன்னய்யாப் பிள்ளை , ஆதி தாளம்
- கேசவ மாதவ கோவிந்தா ,புரந்தரதாசர் , ஆதி தாளம்
- அம்ம நிம்ம மங்கள புரந்தரதாசர் , ஆதி தாளம்
- பஞ்சவர்ணக்கிளி வேதநாயகம் பிள்ளை அட தாளம்
- இந்த வழக்கு வேதநாயகம்பிள்ளை ஆதி தாளம்
- இந்த மனம் வேதநாயகம் பிள்ளை ஆதி தாளம்
- தினமும் நினை மனமே நீலகண்ட சிவன் , மிஸ்ர சாபு தாளம்
- மங்களமே சுப மங்களமே பெரியசாமித்தூரன் , ஆதி தாளம்
பதம்
தொகு- இகநின்னு நம்ம ராத க்ஷேத்ரக்ஞர் த்ரிபுட தாளம்
- பரமகுல ஹ்ருதயம் ஸ்வாதித்திருநாள் ரூபக தாளம்
- சுமுகி சுகமொடே ஸ்வாதித்திருநாள் ஆதி தாளம்
மேற்கோள்கள்
தொகு- ↑ அ. கி. மூர்த்தி (1998). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 161.