ச. பார்த்தசாரதி

மொழிபெயர்ப்பாளர்

ச. பார்த்தசாரதி என்பவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர். இவர் முனைவர் பட்டம் பெற்றவர். இவருடைய தந்தை பெயர் ச. சனார்த்தனம், தாயின் பெயர் கண்ணம்மாள்.

மொழிபெயர்ப்பு தொகு

வடமொழியில் காளிதாசர் எழுதிய சாகுந்தலம் என்ற நாடகத்தைத் தமிழில் ச. பார்த்தசாரதி மொழிபெயர்த்துள்ளார். இது திசம்பர் மாதம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்தது. வடமொழியிலுள்ள வெங்கடேச சுப்பிரபாதத்தையும் தமிழில் மொழிபெயர்த்தார். இதனை இசைக்குயில் எம். எசு. சுப்புலட்சுமி பாடியிருக்கிறார்.

பணி தொகு

தமிழ்ப்பேராசிரியராகத் தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் பணிசெய்தவர்.இவர் ஓய்வு பெற்றது மே மாதம் 1999ஆம் ஆண்டு.

பரிசு தொகு

காளிதாசரின் சாகுந்தலம் நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து இவர் எழுதிய நூலுக்குத் தமிழ்நாடு அரசு சிறந்த இலக்கிய நூல் பரிசை 2002 ஆம் ஆண்டு வழங்கியது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. ஆறாம் வகுப்பு,தமிழ். செய்யுள்: தமிழ்நாடு பாடநூல் கழகம். 2007. பக். 38,39. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._பார்த்தசாரதி&oldid=2350265" இலிருந்து மீள்விக்கப்பட்டது