ச. பாலசுந்தரம்
பாவலரேறு ச. பாலசுந்தரம் (18 சனவரி, 1924, ஆகத்து, 2007) என்பவர் தமிழ் இலக்கண நூலாசிரியர் மற்றும் அகராதித் தொகுப்பாளராவார்.
பாவலரேறு ச. பாலசுந்தரம் | |
---|---|
பாவலர் பாலசுந்தரம் | |
பிறப்பு | ச. பாலசுந்தரம் சனவரி 18, 1924 |
இருப்பிடம் | தஞ்சாவூர் |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | தமிழாய்வு |
பெற்றோர் | மு.சந்திரசேகரன், விசயாம்பாள் |
பிள்ளைகள் | பா. மதிவாணன்[1] |
இளமைக் காலம்
தொகுதஞ்சாவூரின் ஒரு பகுதியாகிய கருந்தட்டான்குடியில் மு.சந்திரசேகரன் -விசயாம்பாள் ஆகியோர்க்கு 1924 சனவரி 18 ஆம் நாள் பிறந்தார்.[2] தந்தையாரின் கருங்கல் பட்டறைத் தொழில் சார்ந்து சிற்பக்கலை பயின்றார். 1950 ஆம் ஆண்டு பங்கயவல்லி என்பவரை மணந்தார். இருவருக்கு இரண்டு மக்கள் உள்ளனர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் வித்துவான் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றார்.
பணியாற்றிய விபரம்
தொகுகரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்திய கரந்தைப் புலவர் கல்லூரியில் 1950ஆம் ஆண்டு ஆசிரியராக அமர்ந்து 1982 வரை பணியாற்றினார்.[2] தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கணிப்பொறி வழி சங்க இலக்கிய அகராதி, சங்க இலக்கியச் சொல்லடைவு தொகுக்கும் பணியில் சிறப்பு உதவியாளராக( 1987-1991 ) பணிபுரிந்துள்ளார்; அரசின் புதிய இலக்கண நூலாக்கக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[மேற்கோள் தேவை] கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சைத் தொல்காப்பியர் கழகம், தஞ்சைத் திருக்குறள் பேரவை, தஞ்சைத் தமிழ்ச்சங்கம், கம்பன் கழகம் ஆகியவற்றில் உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், துணைத்தலைவர், தலைவர் பொறுப்புகளில் இருந்துள்ளார்.
எழுத்துப்பணிகள்
தொகுகரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் பணியாற்றத் தொடங்கிய காலந் தொட்டுக் கவிதைகள், கவிதை நாடகங்கள், உரைநடை நாடகங்கள், இலக்கண ஆய்வுக்கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள் எனத் தமிழ்ப்பொழில், செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, தெளிதமிழ் போன்ற திங்கள் இதழ்களில் எழுதி வந்தார். பாவரங்கம், பட்டிமன்றம், சொற்பொழிவு, வானொலி உரை என பல்வேறு அரங்குகளில் தம் படைப்புகளை வெளியிட்டுள்ளார். வானொலி நாடகங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். கல்லூரி மாணவர்களுக்கெனக் கவிதை நாடகம் எழுதி இசைப்பாடல்களைக் கூட்டி நாடகங்கள் அரங்கேற்றம் செய்துள்ளார். [3]
நாட்டுடமையாக்கம்
தொகு2024 நவம்பரில் ச. பாலசுந்தரத்தின் படைப்புகளை தமிழ்நாடு அரசு நாட்டுடமை ஆக்கி, இவரின் மரபுரிமையாளர்களுக்கு பரிவுத் தொகையாக ரூ 10 இலட்சம் வழங்கியது.[4] [5]
எழுதிய நூல்கள்
தொகு- புலவர் உள்ளம் (கவிதை நாடகம்)
- ஆதிமந்தி (காவிய நாடகம்)
- வேள் எவ்வி ( நாடகம்)
- திருமாவளன் ( நாடகம்)
- கானல் நீர் ( நாடகம்)
- இருபதாம் நூற்றாண்டிற்கான தமிழிலக்கணம் சொற்படலம்
- சிவமும் செந்தமிழும் ( நாடகம்).
- கரந்தைக் கோவை
- மழலைத் தேன் (3 தொகுதி)
- யான் கண்ட அண்ணா.
- கலைஞர்வாழ்க!
- சுவைகள்.
- நாடக மாலை.
- யாழ்மொழி (இசைப்பாடல்).
- அறமாமுகில்.
- அருட்புலவோரும் அரும்பெறற் கவிஞரும்.
- புகழ் பெற்ற தலைவர்கள்.
- இருபெருங் கவிஞர்கள்.
- தொல்காப்பியம் - ஆராய்ச்சிக் காண்டிகை உரை (5 பகுதிகள்)
- செய்யுள் இலக்கணம்.
- மொழியாக்க நெறி மரபிலக்கணம்.
- தமிழ் இலக்கண நூல்களும் பாடவேறுபாடுகளும்.
- மொழி இலக்கண வரலாற்றுச் சிந்தனைகள்.
- மடைமாறிய தமிழ் இலக்கண நூல்கள்.
- தமிழிலக்கண நுண்மைகள்
- எழுத்திலக்கணக் கலைச்சொல் பொருள் விளக்க அகராதி.
- சொல்லிலக்கணக் கலைச்சொல் பொருள் விளக்க அகராதி.
- யாப்பிலக்கணக் கலைச்சொல் பொருள் விளக்க அகராதி.
- அகப்பொருளிலக்கணக் கலைச்சொல் பொருள் விளக்க அகராதி.
- புறப்பொருளிலக்கணக் கலைச்சொல் பொருள் விளக்க அகராதி.
- மொட்டும் மலரும் (சொல்வாய்வு - 3 தொகுதி)
- வழக்குச்சொல் அகராதி.
- வளர்தமிழ் இலக்கணம்.
- தென்னூல் (எழுத்து,சொற்படலங்கள்)
- தென்னூல் (இலக்கியப் படலம்).
- நினைவலைகள்
- நன்னூல் திறனாய்வுரை
- தொல்காப்பியம் என்னும் இராமலிங்க பகீரதம் – திறனாய்வுரை
- திருக்குறள் தெளிவுரை
- புதிய ராகங்கள் ( து.ஆ. தனபாண்டியன், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு - பாடல்கள் பாவலரேறு)
தொகுப்புகள்
தொகு- திருஆலவாய் (மதுரை) வரலாற்றுச் சுருக்கம், தேவாரத் திருப்பதிகம் முதலியன
பதிப்பித்தது
தொகு(தஞ்சை , சரசுவதி மகால் நூலகச்சுவடிகள் வழி).
- தனிப்பாடல் திரட்டு (பொழிப்புரை, விளக்கத்துடன் 2 தொகுதி).
- திருப்பெருந்துறைப் புராணம் (குறிப்புரையுடன்).
- திருநல்லூர்ப் புராணம் (குறிப்புரையுடன்).
- நீதித் திரட்டு (குறிப்புரையுடன்).
- சீர்காழி அருணாசலக் கவிராயர் இராம நாடகக் கீர்த்தணை (ஆராய்ச்சிப் பதிப்பு)
பாவலேறு பெற்ற விருதுகள்
தொகு- பாவலரேறு - பனசை - பாவலர் மன்றம், திருப்பனந்தாள்
- கவிஞர் கோ - திருப்புத்தூர் தமிழ்ச்சங்கம், திருப்புத்தூர்.
- தொல்காப்பியப்போறிஞர் - கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர்
- தொல்காப்பியப் பேரொளி - முத்தமிழ் ஆய்வுமன்றம், சென்னை
- தொல்காப்பியச் சுடர் - தமிழ்வளர்ச்சி மன்றம், சென்னை
- தொல்காப்பியச் செம்மல் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை
- இலக்கணப் பேரொளி- இலக்கியமன்றம், சென்னை
- செந்தமிழ்ச் செம்மல் : மதுரைத்தமிழ்ச்சங்கம், மதுரை
- குறள்நெறிச் செம்மல் -திருக்குறள் பேரவை, தஞ்சாவூர்.
- தமிழ்ப்பேரவைச் செம்மல் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
- பாரதிதாசன் விருது- தமிழக அரசு, சென்னை
- செஞ்சொற் கவிவலவன் - ந.மு.வே.நாட்டார் பேரவை,தஞ்சாவூர்.
- தொல்காப்பியர் விருது-தமிழ்ச்சுரங்கம், சென்னை.
- மாமன்னர் இராசராசன் விருது- சதய விழாக்குழு, தஞ்சை.
- பேராசிரியர் செல்வநாயகம் நினைவு விருது- பேராசிரியர் செல்வநாயகம்
மேற்கோள்
தொகு- ↑ "பாவலரேறு சா. பாலசுந்தரம் நினைவேந்தல் நிகழ்ச்சி". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2014/aug/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE.-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9-949765.html. பார்த்த நாள்: 8 June 2022.
- ↑ 2.0 2.1 "பேராசிரியர் பாவலரேறு ச. பாலசுந்தரம்". ஒன்இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 8 June 2022.
- ↑ கெஜலெட்சுமி. "பாவலரேறு பாலசுந்தரம் உரைத்திறன் - ஓர் ஆய்வு". சுத்கங்கா. பார்க்கப்பட்ட நாள் 8 June 2022.
- ↑ DIN (2024-11-18). "9 தமிழறிஞா்களின் நூல்கள் நாட்டுடைமை: நூலுரிமைத் தொகை ரூ.90 லட்சம் அளிப்பு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-11-19.
- ↑ "க.ப.அறவாணன், கவிஞர் கா.வேழவேந்தன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் 9 பேர் நூல்கள் நாட்டுடைமை: வாரிசுகளுக்கு உரிமை தொகை". Hindu Tamil Thisai. 2024-11-19. பார்க்கப்பட்ட நாள் 2024-11-19.