ச. பூபாலபிள்ளை
(ச. பூபாலப்பிள்ளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வித்துவான் ச. பூபாலபிள்ளை (1856–1921) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பின் மிக மூத்த தமிழறிஞரும், எழுத்தாளரும், புலவரும் ஆவார். இவரையே மட்டக்களப்பின் அறிஞர்களின் முன்னோடி எனக் குறிப்பிடுவர். மதுரைத் தமிழ்ச் சங்க வித்துவான்.
ச. பூபாலபிள்ளை | |
---|---|
பிறப்பு | 1856 மட்டக்களப்பு, இலங்கை |
இறப்பு | 1921 (அகவை 64–65) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | வித்துவான் (மதுரைத் தமிழ்ச் சங்கம்) |
அறியப்படுவது | புலவர், தமிழறிஞர் |
பெற்றோர் | சதாசிவப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுமட்டக்களப்பின் தெற்கே அமைந்துள்ள கோட்டைக்கல்லாறு, புளியந்தீவில் சதாசிவப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை என்பாருக்கு மகனாகப் பிறந்தார்.[1]
இவரது நூல்கள்
தொகு- பெரிய திருத்துறை திருமுருகன் பதிகம் (1882)
- சீமந்தனி புராணம் (1894)
- விநாயகமான்மியம் (மீனாம்பாள் அச்சியந்திரசாலை, கொழும்பு, 1905)
- சிவதோத்திரம் (1905)
- முப்பொருளாராய்ச்சி (தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1919)
- தமிழ்வரலாறு (மட்டுநகர் சுத்தாத்வைத யந்திரசாலை, 1920)
- உலகியல் விளக்கவுரை
- கண்டிநகர் கதிரேசர் பதிகம் (1922)
- கணேசர் கலிவெண்பா
- கொத்துக்குளத்து மாரியம்மன் அகவல்
- சிவமாலை
- நல்லிசை நாற்பது
- புளிய நகர் ஆனைப்பந்தி விக்னேஸ்வரர்
- யாழ்ப்பாணம் அரசடி விநாயகர் அகவல் (1920)