ச. முனிசாமிப் பிள்ளை
ச. முனிசாமிப் பிள்ளை (1903 - நவம்பர் 10, 1956, டர்பன்) இலங்கையில் பிறந்து தென்னாப்பிரிக்காவிற் தமிழ்ப்பணி புரிந்த தமிழறிஞரும், நூலாசிரியரும், பத்திரிகாசிரியரும் ஆவார்.[1]
வாழ்க்கைக் குறிப்புதொகு
1903 ம் ஆண்டில் இலங்கையிற் பிறந்த இவர், தென்னாப்பிரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தார்.[1] பராசர மலர், செந்தமிழ்ச் செல்வன், தமிழ் மணி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவிருந்து பணியாற்றினார். பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.[1] சில நாடக நூல்களைத் தமிழில் எழுதியும், ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தும் தென்னாப்பிரிக்காவில் தமிழ் மாணவர்கள் நடிப்பதற்கு வழங்கினார். பாலர் பாடல் என்னும் செய்யுள் நூலை மாணவர்களுக்காக எழுதி வெளியிட்டார். பாரதியார் நாள் முதன் முதலாகத் தென்னாபிரிக்காவில் இவரின் முயற்சியாலேயே கொண்டாடப்பட்டது.[1] தமிழ்நாடு மற்றும் இலங்கைப் பத்திரிகைகளில் பல கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.[1]