ஜகன்னாதர் கோயில், தலச்சேரி

கேரள மாநிலத்திலுள்ள நகரம், இந்தியா

ஜகன்னாதர் கோயில், தலச்சேரி என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரியில் உள்ள ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாகும்.[1]

தலச்சேரி ஜகன்னாதர் கோயில்

அமைவிடம் தொகு

இக்கோயில் ஜெகநாதர் கோயில் கேட் ரயில் நிலையத்திற்கு அருகில் தலச்சேரி நகரத்திலிருந்து (திசைகள்) சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[2]

வரலாறு தொகு

1908 ஆம் ஆண்டு ஸ்ரீ நாராயண குருவால் இக்கோயில் கட்டப்பட்டது.1927ஆம் ஆண்டு கோயில் வளாகத்தில் குருவின் சிலை அமைக்கப்பட்டது. இத்தாலியில் இருந்து இந்தியா செல்லும் வழியில் கொழும்பில் உள்ள தன்னுடைய சொந்த சிலையை குரு பார்வையிட்டார். இது ஒரு புகழ்பெற்ற கோயிலாகும்.[3] இக்கோயிலானது இந்தியாவில் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலின் பாணியில் கட்டப்பட்டதாகும். மூலவர் சிலை பஞ்சலோகத்தால் பிரபல சிற்பி தவரலி என்பவரால் வடிக்கப்பட்டதாகும்.

படத்தொகுப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. https://www.keralatourism.org/malabar/jagannath-temple-kannur.php
  2. "Kerala Tourism".
  3. "Kerala Temples in Thalassery - Jagannath Temple, Thalassery" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-02.