ஜக்திஷ் பிரசாத் மதூர் (இராஜஸ்தான் அரசியல்வாதி)
இராஜஸ்தான் அரசியல்வாதி (1928-2007)
ஜக்திஷ் பிரசாத் மதூர் (13/1 / 1928 - 04/ 08/2007, Jagdish Prasad Mathur ) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஒரு தலைவராக இருந்தவர் ஆவார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டத்தில் 1928 ஆம் ஆண்டு பிறந்தவர். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் இணைந்த இவர், 1952இல் பாரதீய ஜன சங்கத்தில் உறுப்பினராக ஆனார். 1957-62 காலப்பகுதியில் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜன சங்கத்தின் ராஜஸ்தான் பிரிவின் செயலாளராகவும், தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் அவர் 6 வது மக்களவையில் சிகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்ப்ட்டார். மேலும் 3-4-1970 முதல் 2-4-1976 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/m.pdf
- ↑ "Members Bioprofile". Archived from the original on 2017-03-13. பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.