ஜசுகவுர் மீனா

இந்திய அரசியல்வாதி

ஜசசுகவுர் மீனா (Jaskaur Meena)(பிறப்பு 3 மே 1947) என்பவர் இந்திய அரசியல்வாதியும், இந்திய அரசாங்கத்தின் முன்னாள் மத்திய அமைச்சரும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவரும் ஆவார். இவர் தேசிய அளவில் கட்சியின் பட்டியல் சாதியினர் பழங்குடியினர் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

மீனா 1947-ல் பஞ்சாபின் சங்கரூரில் பிறந்தார். ஆனால் அவரது இளம் வயதிலேயே இவரது குடும்பம் இராசத்தானுக்கு குடிபெயர்ந்தது. இராசத்தான் பல்கலைக்கழகத்தில் இளம் கல்வியியல் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் தனது சமூகத்தின் முதல் பெண் எழுத்தறிவு கொண்ட அரசியல் தலைவர் என்று அறியப்படுகிறார். மீனா இராசத்தான் அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் ஆசிரியராகவும் கல்வி நிர்வாகியாகவும் பணியாற்றினார்.[1] இவர் இராசத்தானில் உள்ள மீனா சமூகத்தைச் சேர்ந்தவர்.

வகித்த பதவிகள்

தொகு
  • 1999: சவாய் மாதோபூர் தொகுதியிலிருந்து 13வது மக்களவை உறுப்பினர்
  • 2003–2004: மத்திய மாநில அமைச்சர், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
  • 2019: தௌசா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.[2]
  • 2021: இராசத்தான் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர்
  • 2019: இந்திய இரயில்வேக்கான நிலைக்குழு உறுப்பினர்.

சமூக செயல்பாடு

தொகு

மீனா 1993ஆம் ஆண்டு சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள மைன்புரா கிராமத்தில் கிராமப்புற பெண்கள் பல்கலைக்கழகம் நிறுவினார். இப்பல்கலைக்கழகம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பெண்களுக்கு கல்வி வழங்குகிறது. இது 4,000 குடும்பங்களின் தீவிர பங்கேற்புடன் கட்டப்பட்டது.

புத்தகங்கள் வெளியீடு

தொகு
  • இன்ஹென் பி ஜானியே - தேசிய அடையாளங்கள் மற்றும் சின்னங்களின் விரிவான விளக்கத்தைக் கொண்டுள்ளது
  • சமய் கி ரெட் - கவிதைகளின் தொகுப்பு
  • கீத் சங்க்ரா - இராசத்தானின் நாட்டுப்புற பாடல்களின் தொகுப்பு
  • மஹிலா கே பாததே சரண்

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Members : Lok Sabha". loksabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2023-03-23.
  2. https://dausa.rajasthan.gov.in/pages/contact-directory/33/30173
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜசுகவுர்_மீனா&oldid=3682090" இலிருந்து மீள்விக்கப்பட்டது