ஜநவிநோதிநி

ஜநவிநோதிநி 1870 இல் தொடங்கி 1890 வரை 21 ஆண்டுகள் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக வெளிவந்த ஓர் அறிவியல் இதழாகும். இவ்விதழை தமிழ்நாடு பாடநூல் நிறுவனமும் வெர்னாக்குலர் சொசைட்டியும் இணைந்து நடத்தின. இவ்விதழில் பல்வேறு விதமான விநோத செய்திகள் வெளியாயின. கல்வி அறிவியல் செய்திகள்தான் இதில் முதன்மையாக இருந்தது[1]. மேலும் இந்நூல் க. நமச்சுவாய முதலியாரால் தொகுக்கப்பட்டு 1940களில் சென்னைப் பல்கலைக்கழக இண்டர்மீடியேட் தேர்வுக்கான பாடத்திட்டமாக வைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. ஆர். லோகநாதன் (18 மே, 2011). "வரலாற்றைச் சேகரிக்கிறேன்!". ஆனந்த விகடன். http://www.vikatan.com//article.php?module=magazine&aid=5982&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=1. பார்த்த நாள்: 27 நவம்பர் 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜநவிநோதிநி&oldid=1973380" இலிருந்து மீள்விக்கப்பட்டது