ஜப்பானின் டி. என். ஏ. தரவு வங்கி
உள்ளடக்கம் | |
---|---|
உயிரினங்கள் | அனைத்தும் |
தொடர்பு | |
ஆய்வு மையம் | பன்னாட்டு நியூக்ளியோடைடு வரிசை தரவுத்தள ஒத்துழைப்பு தேசிய மரபியல் நிறுவனம் |
ஆய்வகம் | தகவல் உயிரியல் மையம் & ஜப்பானின் டி. என். ஏ. தரவு வங்கி |
முதன்மைக் குறிப்புரை | 11752245 |
வெளியிட்ட நாள் | 1986 |
அணுக்கம் | |
வலைத்தளம் | http://www.ddbj.nig.ac.jp |
கருவிகள் | |
ஏனையவை |
ஜப்பானின் டி. என். ஏ. தரவு வங்கி (DNA Data Bank of Japan-DDBJ) என்பது டி. என். ஏ. வரிசைகளைச் சேகரிக்கும் ஒரு உயிரியல் தரவுத்தளமாகும்.[1][2] இது சப்பானின் சிசுவோகா மாகாணத்தில் உள்ள தேசிய மரபியல் நிறுவனத்தில் அமைந்துள்ளது. இது பன்னாட்டு நியூக்ளியோடைடு வரிசை தரவுத்தள ஒத்துழைப்பின் உறுப்பினராகவும் உள்ளது. இது ஐரோப்பிய உயிரியல் தகவல் நிறுவனத்தில் உள்ள ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்துடனும், உயிரித்தொழில்நுட்பவியல் தகவலுக்கான தேசிய மையத்திலுள்ள மரபணு வங்கியுடன் தினசரி அடிப்படையில் இதன் தரவைப் பரிமாறிக் கொள்கிறது. எனவே இந்த மூன்று தரவு வங்கிகளும் எந்த நேரத்திலும் ஒரே தரவைக் கொண்டிருக்கும்.
வரலாறு
தொகுடி. டி. பி. ஜெ. 1987ஆம் ஆண்டு[3] தேசிய மரபியல் நிறுவனத்தில் தரவு வங்கி நடவடிக்கைகளைத் தொடங்கியது. இது ஆசியாவின் ஒரே நியூக்ளியோடைடு வரிசை தரவு வங்கியாக உள்ளது.[4]
அமைப்பு
தொகுடி. டி. பி. ஜெ..முக்கியமாக சப்பானிய ஆராய்ச்சியாளர்களிடமிருந்து இதன் தரவைப் பெறுகிறது என்றாலும், வேறு எந்த நாட்டிலிருந்தும் பங்களிப்பாளர்களிடமிருந்து தரவை ஏற்றுக்கொள்ள முடியும். டி. டி. பி. ஜெ..முதன்மையாக சப்பானிய கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிதியளிக்கப்படுகிறது. டி. டி. பி. ஜெ..ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பன்னாடு ஆலோசனைக் குழுவைக் கொண்டுள்ளது. இதில் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பானிலிருந்து தலா 3 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தக் குழு டி. டி. பி. ஜெ. க்கு ஆண்டுக்கு ஒருமுறை இதன் பராமரிப்பு, மேலாண்மை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்குகிறது. இது தவிர, டி. டி. பி. ஜெ. ஒரு பன்னாடு ஒத்துழைப்புக் குழுவையும் கொண்டுள்ளது. இது பன்னாட்டு ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்களுக்கு ஆலோசனை வழங்குகிறது.
மேலும் பார்க்கவும்
தொகு- உயிர்தொழில்நுட்பவியல் தகவல் தேசிய மையம்
- ஐரோப்பிய உயிர் தகவலியல் நிறுவனம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "DNA Data Bank of Japan (DDBJ) for genome scale research in life science.". Nucleic Acids Res 30 (1): 27–30. 2002. doi:10.1093/nar/30.1.27. பப்மெட்:11752245.
- ↑ "DDBJ progress report". Nucleic Acids Res. 39 (Database issue): D22–7. January 2011. doi:10.1093/nar/gkq1041. பப்மெட்:21062814.
- ↑ Tateno, Y.; Gojobori, T. (1 January 1997). "DNA Data Bank of Japan in the age of information biology". Nucleic Acids Research 25 (1): 14–17. doi:10.1093/nar/25.1.14. பப்மெட்:9016494.
- ↑ Sagar Aryal Nucleotide sequences database 22 February 2019 microbenotes.com accessed 26 March 2021
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ தளம்
- மெட்டாபேஸில் DDBJ நுழைவு.