ஜப்பானிய பட்டு

ஜப்பானியப் பட்டு ஜப்பான் நாட்டில் பட்டு உற்பத்தி செய்யப்படும் பட்டாகும். 1930 முதல் 1950 வரை இங்குப் பட்டுத் தொழில் பிரதானமாக இருந்தது, ஆனால் இப்போது குறைவாகவே காணப்படுகிறது. [1]

Four men weigh bundles of raw silk in Japan, in September 1918.
ஜப்பானில் பட்டு உற்பத்தி - மூல பட்டு எடை

வரலாறு

தொகு

பட்டின் முக்கியத்துவம் கிழக்கு ஆசியாவில் சீனாவிலிருந்து பைசாண்டினிய பேரரசிற்குப் பட்டுப்புழுக்கள் கடத்தப்பட்டபோது குறைய ஆரம்பித்தது. ஐரோப்பாவில் 1845இல், வைரைசால் ஏற்பட்ட மைக்ரோஸ்போராடிய, நோசிமா பாம்பிசிசு, சப்பை நோய் நோய்களால் ஐரோப்பியப் பட்டுத் தொழில் அழிந்தது.[2]

இது சீனா மற்றும் ஜப்பானிலிருந்து பட்டுக்கான தேவைக்கு வழிவகுத்தது. இங்கு பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஜப்பானிய ஏற்றுமதிகள் சர்வதேசத் சந்தையில் சீனர்களுடன் நேரடியாகப் போட்டியிட்டன.

1850 மற்றும் 1930க்கு இடையில், கச்சாப் பட்டு இரு நாடுகளும் ஏற்றுமதியில் முன்னணி நாடக உள்ளது, இது ஜப்பானின் மொத்த ஏற்றுமதியில் 20% -40% மற்றும் சீனாவின் 20% -30% ஆகும்.[3]

1890 கள் முதல் 1930 கள் வரை, ஜப்பானியப் பட்டு ஏற்றுமதி நான்கு மடங்காக உயர்ந்து. இந்த நேரத்தில் ஜப்பானை உலகின் மிகப்பெரிய பட்டு ஏற்றுமதியாளராக மாற்றியது; மெய்சி மீள்விப்பின் போது ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் குயிங் வம்சத்தின் வீழ்ச்சியின் காரணமாக, ஜப்பானின் விரைவான தொழில் மயமான நாடாக மாறியது. அதே நேரத்தில் சீன தொழில்கள் தேக்கமடைந்தது.[4]

இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பானுக்கு எதிரான தடைகள் நைலான் போன்ற செயற்கைப் பொருள்களை ஏற்றுக்கொள்ள வழிவகுத்தன.[5] இது ஜப்பானியப் பட்டுத் தொழிலின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததோடு உலகின் முன்னணி பட்டு ஏற்றுமதியாளராக நிலையினையும் மாற்றியது. 1980களில் பொருளாதார சீர்திருத்தங்களால் சீனா உலகின் மிகப்பெரிய பட்டு ஏற்றுமதி நாடாக உள்ளது.[6]

மேலும் காண்க

தொகு
  • அந்தேரேயா யமமை, ஜப்பானில் காட்டு பட்டு அந்துப்பூச்சி இனங்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Japanese Silk". JapanTackle.
  2. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k3024c/f443.table Gallica
  3. http://personal.lse.ac.uk/mad1/ma_pdf_files/edcc%20sericulture.pdf%7Ctitle=Why Japan, Not China, Was the First to Develop in East Asia: Lessons from Sericulture, 1850–1937|work=Debin Ma}}
  4. http://personal.lse.ac.uk/mad1/ma_pdf_files/edcc%20sericulture.pdf%7Ctitle=Why Japan, Not China, Was the First to Develop in East Asia: Lessons from Sericulture, 1850–1937|work=Debin Ma}}
  5. https://www.acs.org/content/acs/en/education/whatischemistry/landmarks/carotherspolymers.html
  6. Anthony H. Gaddum, "Silk", Business and Industry Review, (2006). In Encyclopædia Britannica
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜப்பானிய_பட்டு&oldid=3112210" இலிருந்து மீள்விக்கப்பட்டது