ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் 2019
ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்கள் 2019, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மாநிலம் முழுவதும் சராசரியாக 98.3% வாக்குகள் பதிவானது.[1] கிராம ஊராட்சிகளுக்கான தேர்தல்கள் நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நவம்பர் 17, 20, 24, 27, 29 மற்றும் டிசம்பர் 1, 4, 8 மற்றும் 11 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.
இத்தேர்தல் மூலம் 18,833 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,375 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள், 310 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முன்னதாக இத்தேர்தலை தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சிகள் புறக்கணித்தன.
ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தல் முடிவுகள்
தொகு24 அக்டோபர் 2019 அன்று ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அன்றே வாக்கு எண்ணிக்கை துவங்கி[2] முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடந்த 310 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் 217 தலைவர் பதவிகளையும், பாரதிய ஜனதா கட்சி 81 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளையும், தேசிய சிறுத்தைகள் கட்சி 8 தலைவர் பதவிகளையும், இந்திய தேசிய காங்கிரசு 1 தலைவர் பதவிடத்தையும் கைப்பற்றியது. [3]